2021 முதல் இருக்கும் தற்போதைய அமெரிக்க அதிபர் From Wikipedia, the free encyclopedia
யோசப் இராபினெட் பைடன் இளை. (Joseph Robinette Biden Jr.; பிறப்பு: நவம்பர் 20, 1948) அமெரிக்க அரசியல்வாதியும் ஐக்கிய அமெரிக்காவின் 46வது அரசுத்தலைவரும் ஆவார். 2020 அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021 சனவரியில் இவர் 46-வது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றார்.[1] மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான பைடன், முன்னதாக 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 47-வது துணைக் குடியரசு தலைவராகவும், 1973 முதல் 2009 வரை டெலவெயர் மாநிலத்தின் சார்பாக அமெரிக்க அமெரிக்க மூதவை உறுப்பினராகவும் பதவியில் இருந்தார்.
ஜோ பைடன் Joe Biden | |
---|---|
46வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் | |
பதவியில் சனவரி 20, 2021 | |
துணை அதிபர் | கமலா ஆரிசு |
Succeeding | டோனால்ட் டிரம்ப் |
47வது ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் | |
பதவியில் சனவரி 20, 2009 – சனவரி 20, 2017 | |
குடியரசுத் தலைவர் | பராக் ஒபாமா |
முன்னையவர் | டிக் சேனி |
பின்னவர் | மைக் பென்சு |
டெலவெயர் மாநிலத்துக்கான மேலவை உறுப்பினர் | |
பதவியில் சனவரி 3, 1973 – சனவரி 15, 2009 | |
முன்னையவர் | ஜே. காலிப் பொக்சு |
பின்னவர் | டெட் காஃப்மேன் |
மேலவையின் வெளியுறவுத் துறைக் குழுத் தலைவர் | |
பதவியில் சனவரி 3, 2007 – சனவரி 3, 2009 | |
முன்னையவர் | இரிச்சார்டு லூகர் |
பின்னவர் | ஜான் கெர்ரி |
பதவியில் சூன் 6, 2001 – சனவரி 3, 2003 | |
முன்னையவர் | செசி எல்ம்சு |
பின்னவர் | இரிச்சார்டு லூகர் |
பதவியில் சனவரி 3, 2001 – சனவரி 20, 2001 | |
முன்னையவர் | செசி எல்ம்சு |
பின்னவர் | செசி எல்ம்சு |
நியூகாசில் கவுண்டி உறுப்பினர் | |
பதவியில் நவம்பர் 4, 1970 – நவம்பர் 8, 1972 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | யோசேப்பு உரொபினெட் பைடன், இளை. நவம்பர் 20, 1942 இசுக்கிராண்டன், பென்சில்வேனியா, ஐ.அ. |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
துணைவர்(கள்) | நெய்லியா அண்டர் (ஆகத்து 27, 1966 - திசம்பர் 18, 1972, இறப்பு ஜில் யாக்கோப்சு (தி. சூன் 17, 1977 |
பிள்ளைகள் |
|
பெற்றோர் |
|
கல்வி | டெலவெயர் பல்கலைக்கழகம் (இளங்கலை) சிரக்கியூஸ் பல்கலைக்கழகம் (முனைவர்) |
வேலை |
|
விருதுகள் | விடுதலைக்கான அரசுத்தலைவர் பதக்கம் (2017) |
கையெழுத்து | |
இணையத்தளம் | பிரச்சார இணையதளம் வெள்ளை மாளிகை இணையதளம் |
பென்சில்வேனியா, இசுக்கிராண்டன், மற்றும் டெலவெயர், நியூகாசில் கவுண்டி ஆகிய இடங்களில் வளர்ந்த பைடன், டெலவெயர் பல்கலைக்கழகத்தில் பயின்று சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், பின்னர் 1968 இல் சிரக்கியூசு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[2] இவர் 1969-இல் ஒரு வழக்கறிஞரானார். 1970 இல் நியூகாசில் கவுண்டி உள்ளாட்சி சபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார். 1972 இல் தனது 29-வது அகவையில் டெலவெயர் மாநிலத்தில் இருந்து அமெரிக்க மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்க வரலாற்றில் மூதவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறாவது இளையவர் என்ற பெருமையையும் பெற்றார். மேலவையின் வெளியுறவுக் குழுவின் நீண்டகால உறுப்பினராக இருந்து, இறுதியில் அதன் தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். இவர் 1991-இல் நடத்தப்பட்ட வளைகுடாப் போரை எதிர்த்தார், ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பை விரிவுபடுத்தவும், 1990களில் [[யுகோசுலாவியா|யுகோசுலாவியப் போர்களில் அமெரிக்கப் பங்களிப்புக்கும் ஆதரவளித்தார்.
2002 இல் ஈராக்கியப் போரை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தார். ஆனாலும், 2007 இல் ஈராக்கில் அமெரிக்கப் படைகளின் அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 1987 முதல் 1995 வரை அமெரிக்க மேலவையின் நீதித்துறைக் குழுவின் தலைவராக இருந்து, போதைப்பொருள் கொள்கை, குற்றத் தடுப்பு குடிமக்கள் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாண்டார். வன்முறைக் குற்றக் கட்டுப்பாடு மற்றும் சட்ட அமலாக்கச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கு பைடன் தலைமை தாங்கினார். மேலும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு ராபர்ட் போர்க் மற்றும் கிளாரன்ஸ் தாமஸ் ஆகியோரின் சர்ச்சைக்குரிய வழக்குகளை மேற்பார்வையிட்டார். 1988 மற்றும் 2008 இல் சனநாயகக் கட்சியின் குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கான போட்டிகளில் பங்குபற்றித் தோல்வியடைந்தார்.
பைடன் அமெரிக்க மேலவைக்கு ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் பராக் ஒபாமாவுடன் துணைத் தலைவர் பதவியை வென்ற பிறகு தன் உறுப்பினர் பதவியைத் துறந்தார்.[3] அப்போது இவர் நான்காவது மிக மூத்த மேலவை உறுப்பினராக இருந்தார். ஒபாமாவும் பைடனும் 2012 தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணைத் தலைவராக, பைடன் பெரும் பொருளாதாரத் தேக்கத்தைப் போக்குவதற்காக 2009 இல் அமெரிக்க உள்கட்டமைப்பு செலவினங்களை மேற்பார்வையிட்டார். காங்கிரசின் குடியரசுக் கட்சியினருடனான அவரது பேச்சுவார்த்தைகள் ஒபாமா நிர்வாகத்திற்கு 2010 வரி நிவாரணச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களை இயற்ற உதவியது, இது வரிவிதிப்பு முட்டுக்கட்டையைத் தீர்த்தது; கடன் உச்சவரம்பு நெருக்கடியைத் தீர்க்க உதவிய 2011 நிதியறிக்கைக் கட்டுப்பாட்டுச் சட்டம்; மற்றும் 2012 ஆம் ஆண்டின் அமெரிக்க வரி செலுத்துவோர் நிவாரண சட்டம் ஆகியவற்றில் பைடனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. வெளியுறவுக் கொள்கையில், அமெரிக்க-உருசிய புதிய "ஸ்டார்ட்" ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கு பைடன் தலைமை தாங்கினார்; லிபியாவில் இராணுவத் தலையீட்டை ஆதரித்தார்; 2011 இல் ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் ஈராக்கு தொடர்பான அமெரிக்கக் கொள்கையை வகுக்க உதவியது. சாண்டி ஹூக் தொடக்கப்பள்ளி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பைடன் துப்பாக்கி வன்முறைப் பணிக்குழுவை வழிநடத்தியமை, அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக்கான காரணங்களைக் கண்டறிய உதவியது.[4] அக்டோபர் 2015 இல், 2016 தேர்தலில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பைடன் அறிவித்தார். 2017 சனவரியில், இவருக்கு குடியரசுத்தலைவரின் விடுதலைப் பதக்கத்தை ஒபாமா வழங்கினார்.[5]
2019 ஏப்ரலில், 2020 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். 2020 சூனில், கட்சியின் வேட்பு மனினுவைப் பெறுவதற்குத் தேவையான 1,991 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றார்.[6] 2020 ஆகத்து 11 இல், தனது துணைத் தலைவர் வேட்பாளராக கலிபோர்னியாவின் மேலவை உறுப்பினர் கமலா ஆரிசை அறிவித்தார். நவம்பர் 3 இல் நடைபெற்ற தேர்தலில் பைடன் 45வது தலைவர் திரம்பை வென்றார்.[7][8] இதன் மூலம், 1968 இல் இரிச்சார்ட் நிக்சனுக்குப் பின்னர் துணைத் தலைவராகப் பதவியில் இருந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.[9][10][11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.