ஜொகூர் அரச இராணுவப் படை
From Wikipedia, the free encyclopedia
ஜொகூர் அரச இராணுவப் படை (ஆங்கிலம்: Royal Johor Military Force (JMF); மலாய்: Askar Timbalan Setia Negeri Johor; சீனம்: 柔佛御林军) என்பது ஜொகூர் மாநிலத்தின் அரச பாதுகாப்புப் படை; மற்றும் ஜொகூர் சுல்தானின் தனியார் அரசக் காவலர் படையும் ஆகும். மலேசியாவில் இன்றும் செயல்பாட்டில் உள்ள மிகப் பழமையான இராணுவப் பிரிவு; மற்றும் மலேசியாவில் ஒரு மாநில அரசால் பராமரிக்கப்படும் ஒரே இராணுவப் படையும் ஆகும்.[3][2]
விரைவான உண்மைகள் ஜொகூர் அரச இராணுவப் படை Royal Johor Military Force, உருவாக்கம் ...
ஜொகூர் அரச இராணுவப் படை Royal Johor Military Force | |
---|---|
Askar Timbalan Setia Negeri Johor عسكر تيمبلن ستيا نڬري جوهر | |
ஜொகூர் அரச இராணுவப் படையின் சின்னம் | |
உருவாக்கம் | 11 மே 1886; 138 ஆண்டுகள் முன்னர் (1886-05-11) |
நாடு | மலேசியா |
பற்றிணைப்பு | ஜொகூர் சுல்தான் |
வகை | தனியார் இராணுவம், அரச காவலர், தரைப்படை |
பொறுப்பு | * முதன்மை: ஜொகூர் சுல்தான், அரச குடும்பம், அரச சொத்துக்களைப் பாதுகாத்தல்.
|
அளவு | 425[1] |
அரண்/தலைமையகம் | சுல்தான் இப்ராகிம் முகாம், ஜொகூர் பாரு |
சுருக்கப்பெயர்(கள்) | "சுல்தானின் சொந்த மெய்க்காப்பாளர்கள்"[2] "சுல்தானின் படைகள்"[3] |
பாதுகாவலர் | ஜொகூர் சுல்தான் |
குறிக்கோள்(கள்) | உண்மையுடன் கீழ்ப்படியுங்கள் (Taat dengan setia) |
நிறம் |
|
ஆண்டு விழாக்கள் | 11 மே மாதம் |
சண்டைகள் |
|
தளபதிகள் | |
படைத்தலைவர் | சுல்தான் இப்ராகிம் இசுகந்தர், ஜொகூர் சுல்தான் |
கட்டளை அதிகாரி | மேஜர் ஜெனரல் துங்கு இசுமாயில் இட்ரிஸ், ஜொகூர் பட்டத்து இளவரசர் |
வானூர்திகள் | |
உலங்கு வானூர்தி | சிக்கோர்ஸ்கி S-76 |
மூடு
இந்தப் பாதுகாப்புப் படை ஜொகூர் சுல்தானின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதன் தலைமையகம் ஜொகூர் பாருவில் உள்ள சுல்தான் இப்ராகிம் முகாமில் அமைந்துள்ளது.[4]