From Wikipedia, the free encyclopedia
ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bayan Baru; ஆங்கிலம்: Bayan Baru Federal Constituency; சீனம்: 峇央峇鲁国会议席) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P050) ஆகும்.[6]
ஜெலுத்தோங் (P050) மலேசிய மக்களவைத் தொகுதி பினாங்கு | |
---|---|
Jelutong (P050) Federal Constituency in Penang | |
மாவட்டம் | வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் பினாங்கு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 94,313 (2023)[1] |
வாக்காளர் தொகுதி | ஜெலுத்தோங் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | ஜார்ஜ் டவுன், பினாங்கு; ஜெலுத்தோங், பத்து பெரிங்கி, தஞ்சோங் பூங்கா, தஞ்சோங் தொக்கோங், பத்து லஞ்சாங், பாயா தெருபோங் |
பரப்பளவு | 10 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | ஆர். எஸ். என். ராயர் (Sanisvara Nethaji Rayer Rajaji Rayer) |
மக்கள் தொகை | 113,725 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி; முன்பு காலத்தில் இங்கு தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். 1980-ஆம் ஆண்டுகளில் நகரமயமாக்கல், இந்தப் பகுதியைப் பெருநகரப் புறநகர்ப் பகுதியாக மாற்றி அமைத்தது.
ஒரு காலத்தில் இங்கு டயரா கோசதுலாட்டா (Dyera Costulata) எனும் ஒரு வகையான ஜெலுத்தோங் மரங்கள் அதிகமாக இருந்ததாக நம்பப்படுகிறது. அந்த மரnக்களின் நினைவாக ஜெலுத்தோங் என்று இந்த இடத்திற்குப் பெயரிடப்பட்டது. மலேசியாவின் பிரபல வழக்கறிஞரான கர்பால் சிங் (Karpal Singh), ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதியில்தான் முதன்முதலில் தேசிய அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைத்தார்.
31 சூலை 1978 தொடங்கி 29 நவம்பர் 1999 வரையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருந்தார். இவர் 'ஜெலுத்தோங் புலி' (Tiger of Jelutong) எனும் புனைப் பெயரைப் பெற்றார்.[7]
ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் டத்தோ கிராமட் மக்களவைத் தொகுதியில் இருந்து ஜெலுத்தோங் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P043 | 1974–1978 | ராசையா ராஜசிங்கம் (Rasiah Rajasingam) | பாரிசான் நேசனல் (கெராக்கான்) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | கர்பால் சிங் (Karpal Singh) | ஜனநாயக செயல் கட்சி | |
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P046 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P049 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | லீ கா சூன் (Lee Kah Choon) | பாரிசான் நேசனல் (கெராக்கான்) | |
11-ஆவது மக்களவை | P050 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | ஜெப் ஊய் (Jeff Ooi) | பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | ஆர். எஸ். என். ராயர் (Sanisvara Nethaji Rayer) | பாக்காத்தான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 93,989 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) | 71,753 | 75.23% | ▼ - 8.67% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) | 70,707 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) | 188 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) | 858 | ||
பெரும்பான்மை (Majority) | 38,604 | 54.60% | ▼ - 5.36 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
மலேசிய அரசாங்க அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613); [8]சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[9] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
ஆர். எஸ். என். ராயர் (Sanisvara Nethaji Rayer Rajaji Rayer) |
பாக்காத்தான் | 70,707 | 50,369 | 71.24% | - 8.39% ▼ | |
பல்ஜிட் சிங் சிகிரி சிங் (Baljit Singh Jigiri Singh) |
பெரிக்காத்தான் | - | 11,765 | 16.64% | + 16.64% | |
லோகநாதன் துரைசாமி (Loganathan Thoraisamy) |
பாரிசான் | - | 7,387 | 10.45% | - 9.22% ▼ | |
யாக்கோப் நூர் (Yaacab Noor) |
சுயேச்சை | - | 480 | 0.68% | + 0.68% | |
லிம் குவாட் போ (Lim Huat Poh) |
சபா வாரிசான் | - | 440 | 0.49% | + 0.49% | |
கோ சுவீ யோங் (Koh Swe Yong) |
மலேசிய மக்கள் கட்சி | - | 264 | 0.37 % | + 0.37 % |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.