![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Jerantut_town.jpg/640px-Jerantut_town.jpg&w=640&q=50)
ஜெராண்டுட் மாவட்டம்
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஜெராண்டுட் மாவட்டம் (ஆங்கிலம்: Jerantut District; மலாய்: Daerah Jerantut; சீனம்: 而连突县; ஜாவி: ﺟﺮﻧﺘﻮﺕ ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் ஜெராண்டுட்.
விரைவான உண்மைகள் ஜெராண்டுட் மாவட்டம், நாடு ...
ஜெராண்டுட் மாவட்டம் | |
---|---|
Jerantut District | |
Daerah Jerantut | |
![]() ஜெராண்டுட் நகரம் | |
![]() ஜெராண்டுட் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 3°56′N 102°22′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ஜெராண்டுட் |
தொகுதி | ஜெராண்டுட் |
உள்ளூராட்சி | ஜெராண்டுட் நகராண்மைக் கழகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,207.6 km2 (2,782.9 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 86,840 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 27xxx |
மலேசியத் தொலைபேசி | +6-09 |
மலேசியப் போக்குவரத்து எண் | C |
மூடு
ஜெராண்டுட் மாவட்டம் பகாங் மாநிலத்தின் மிகப் பெரிய மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் வட எல்லையில் கிளாந்தான், திராங்கானு மாநிலங்கள் உள்ளன. தெற்கே தெமர்லோ மாவட்டம், மாரான் மாவட்டம்; மேற்கே லிப்பிஸ் மாவட்டம், ரவுப் மாவட்டம்; கிழக்கே குவாந்தான் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. ஜெராண்டுட் மாவட்டத்தில் தெம்பிலிங் ஆறு ஓடுகிறது.