![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/13/Jayanti-kulagaurava.webp/640px-Jayanti-kulagaurava.webp.png&w=640&q=50)
ஜெயந்தி (நடிகை)
அபிநய சாரதே ஜெயந்தி / From Wikipedia, the free encyclopedia
கமலா குமாரி (6 சனவரி 1945 - 26 சூலை 2021), ஜெயந்தி (Jayanthi) என்ற தனது மேடைப் பெயரால் அறியப்படும் இவர், கன்னடத் திரைப்படத்துறை மற்றும் தமிழகத் திரைப்படத்துறையில் தனது பணிக்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகையாவார்.[1][2] 1960கள், 1970கள் மற்றும் 1980களின் முற்பகுதியில் இருந்து பல்வேறு வகை படங்களில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக குறிப்பிடப்பட்ட இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் மராத்திய மொழிகளில் படங்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏழு கர்நாடக மாநில திரைப்பட விருதுகள்,[3] நான்கு முறை சிறந்த நடிகையாகவும், இரண்டு முறை சிறந்த துணை நடிகையாகவும், சிறந்த நடிகைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் மற்றும் சிறந்த நடிகைக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றார். இவர் கன்னடத் திரைய்லகின் "மிகவும் தைரியமான மற்றும் அழகான" நடிகையாக பல்வேறு ஊடகங்கள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளார்.[4] இந்த தலைப்பு இவருக்கு கணிசமான விளம்பரத்தைப் பெற்றுத் தந்தது. கன்னடத் திரையுலகம் அவருக்கு "அபிநய சாரதே" ( நடிப்பில் சாரதா தேவி ) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
ஜெயந்தி | |
---|---|
![]() | |
பிறப்பு | கமலா குமாரி (1945-01-06)6 சனவரி 1945 பெல்லாரி, சென்னை மாகாணம், (தற்போதைய கருநாடகம்), இந்தியா |
இறப்பு | 26 சூலை 2021(2021-07-26) (அகவை 76) பனசங்கரி |
பணி | நடிகை, தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1960–2021 |
வாழ்க்கைத் துணை | பெக்கெட் சிவராம் |
பிள்ளைகள் | 1 |