ஜிப்ரால்டர் சர்வதேச விமான நிலையம்
பிரித்தானிய வெளிநாட்டு ஆட்புலனான ஜிப்ரால்ட்டரில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம். / From Wikipedia, the free encyclopedia
ஜிப்ரால்டர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது ஜிப்ரால்டர் சர்வதேச விமான நிலையம் அல்லது நார்த் ஃப்ரண்ட் வானூர்தி நிலையம் (வடக்கு முனை வானூர்தி நிலையம்) (IATA: GIB, ICAO: LXGB) (ஐஏடிஏ: GIB, ஐசிஏஓ: LXGB) என்பது பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்களுள் ஒன்றான ஜிப்ரால்டரில் சேவை செய்யும் குடிசார் வானூர்தி நிலையமாகும். அவாப (RAF) ஜிப்ரால்டர் என்று வழங்கப்படும் இதன் வானூர்தி ஓடுபாதை அரச வான் படையின் பயன்பாட்டுக்கென உள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமானது. குடிசார் வினைஞர்களால் இயக்கப்படும் முனையத்தைக் குடிசார் வானூர்திச்சேவை வழங்குநர்கள் பயன்படுத்துகின்றனர். நாட்டு வானூர்திப் போக்குவரத்துச் சேவைகள் நிறுவனம் (NATS) இதன் வானூர்தி வழிநடத்துதல் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தந்தைப் பெற்றுள்ளது.
ஜிப்ரால்டர் பன்னாட்டு வானூர்தி நிலையம் வடக்கு முனை வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | ராணுவம்/பாெது | ||||||||||
உரிமையாளர் | பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு | ||||||||||
இயக்குனர் | ஜிப்ரால்டர் அரசு | ||||||||||
சேவை புரிவது | ஜிப்ரால்ட்டர் (பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்) மற்றும் காம்போ த ஜிப்ரால்ட்டர் (எசுப்பானியா)[1] | ||||||||||
உயரம் AMSL | 12 ft / 4 m | ||||||||||
ஆள்கூறுகள் | 36°9′4″N 5°20′59″W | ||||||||||
இணையத்தளம் | https://www.gibraltarairport.gi/ | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2022) | |||||||||||
| |||||||||||
மூலம்: வானூர்தி நிலையத் தரவுகள்[2] |
இந்தப் பன்னாட்டு வானூர்தி நிலையம், 2022-ஆம் ஆண்டில், 4,46,187 பயணிகள் மற்றும் 121 டன் சரக்குகளை 3,868 வானூர்தி இயக்கங்கள் மூலம் கையாண்டது.[3] ஸ்பெயினுடனான நிலப்பகுதி நோக்கிச் செல்லும் முதன்மைப் பாதையான வின்ஸ்டன் சர்ச்சில் நிழற்சாலை, வானூர்தி ஓடுபாதையைப் பிரிக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் ஒரு வானூர்தி புறப்படும் போது சாலை மூடப்படவேண்டியுள்ளது. ஜிப்ரால்ட்டர் விரிகுடாவுக்கும் அங்கிருக்கும் பாறைகளுக்கும் பக்கவாட்டில் வலுவான காற்று வீசுவதால் குளிர்காலங்களில் வானூர்தியைத் தரையிறக்குவது கடினமாக இருக்கிறது. எனவே, அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமான ஹிஸ்டரி சேனல் அதன் மிகக் கடுமுனைப்பான வானிலையங்கள் பட்டியலில் இந்த வானிலையத்துக்கு ஐந்தாவது இடத்தை வழங்கியது.[4]