![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/39/Zahida_Khan_Kaman.jpg/640px-Zahida_Khan_Kaman.jpg&w=640&q=50)
ஜாஹிதா கான் (இந்திய அரசியல்வாதி)
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஜாஹிதா கான் (Zahida Khan) என்பவர் இந்திய தேசிய காங்கிசு கட்சியினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராசத்தான் அரசாங்கத்தின் அமைச்சராகவும்[1] இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[2] [3] இவர் முதலில் 2008-ல் இராசத்தானின் கமான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2018-ல் மீண்டும்[4] தேர்ந்தெடுக்கப்பட்டு இராசத்தான் அரசின் சட்டமன்ற செயலாளராகவும், மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[5] அக்டோபர் 2011-ல் அகில இந்திய மகிளா காங்கிரசின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் ஜாகிதா கான், இராசத்தான் மாநில அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, அச்சு மற்றும் எழுதுபொருள் துறை, கல்வி (தொடக்கக்கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி), கலை, இலக்கியம், கலாச்சாரம் துறை அமைச்சர் ...
ஜாகிதா கான் | |
---|---|
![]() | |
இராசத்தான் மாநில அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, அச்சு மற்றும் எழுதுபொருள் துறை, கல்வி (தொடக்கக்கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி), கலை, இலக்கியம், கலாச்சாரம் துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 2021 | |
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் திசம்பர் 2018 – திசம்பர் 2023 | |
தொகுதி | கமான் சட்டமன்றத் தொகுதி |
இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் திசம்பர் 2008 – திசம்பர் 2013 | |
தொகுதி | கமான் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 மார்ச்சு 1968 (1968-03-08) (அகவை 56) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ஜலீசு கான் |
பெற்றோர் | தயாப் உசைன் |
தொழில் | அரசியல்வாதி |
மூடு