![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5b/Jhabuaflag.png/640px-Jhabuaflag.png&w=640&q=50)
ஜாபூவா சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
ஜாபூவா சமஸ்தானம் (Jhabua State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள ஜாபூவா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் ஜாபூவ நகரம் ஆகும். 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜாபூவா இராச்சியம் 3460 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 80,889 மக்கள் தொகையும், ரூபாய் 1,10,000 ஆண்டு வருமானம் கொண்டிருந்தது.[1] இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
ஜாபூவா சமஸ்தானம் | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
![]() | ||||||
தலைநகரம் | ஜாபூவா | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1584 | ||||
• | 1947 இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
Population | ||||||
• | 1901 | 80,889 | ||||
தற்காலத்தில் அங்கம் | ஜாபூவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1956-ஆம் ஆண்டில் ஜாபூவா இராச்சியத்தை மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஜாபூவா இராச்சியப் பகுதிகளை மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[2]