ஜான் பிரான்சிசு டேலி
அமெரிக்க நடிகர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
ஜான் பிரான்சிசு டேலி (ஆங்கில மொழி: John Francis Daley) (பிறப்பு: 20 சூலை 1985) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர், இசைக்கலைஞர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'புரீக்ஸ் அண்ட் கீக்சு' (1999-2000) என்ற நகைச்சுவை நாடகத்தில் உயர்நிலைப் பள்ளி புதிய மாணவராக சாம் வீர் என்ற கதாபாத்திரத்திலும், 'போனசு' (2014-2017) என்ற புலன் விசாரணை குற்றவியல் தொடரில் விவரிப்பாளர் டாக்டர். லான்ஸ் ஸ்வீட்சு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் அறியப்படுகிறார். இதற்காக இவர் 2014 ப்ரிஸ்ம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[1] அத்துடன் இவர் டேபிளேயர் என்ற இசைக்குழுவுவில் கீபோர்டு வாசிப்பார் மற்றும் பாடகராகவும் உள்ளார்.[2]
ஜான் பிரான்சிசு டேலி | |
---|---|
பிறப்பு | சூலை 20, 1985 (1985-07-20) (அகவை 38) வீலிங், இல்லினாய்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1998–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | கொரின் கிங்ஸ்பரி (தி. 2016) |
பிள்ளைகள் | 1 |
இவர் திரைப்படத்துறையில் ஜொனாதன் கோல்ட்ஸ்டைனுடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டதற்காக அறியப்படுகிறார். இந்த ஜோடி பல்வேறு திட்டங்களில் ஒன்றாக வேலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஜோன் வாட்ஸ், கிறிஸ்டோபர் போர்டு, கிறிஸ் மெக்கேனா மற்றும் எரிக் சோமர்ஸ் ஆகியோருடன் இணைந்து இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்[3][4] (2017) என்ற படத்துக்காக இணை கதை எழுத்தாளர்களாக பணிபுரிந்துள்ளார், மேலும் இவர்கள் 2018 நகைச்சுவை 'கேம் நைட்' என்ற படத்தை இணைந்து இயக்கியுள்ளனர்.[5]