ஜான்சன் அண்ட் ஜான்சன்
From Wikipedia, the free encyclopedia
ஜான்சன் அண்ட் ஜான்சன் (நிபச: JNJ, Johnson & Johnson) ஒரு அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது 1886 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது மருந்துகள், மருத்துவபொருட்கள், சுகாதார பொருட்கள், ஒப்பனை உலகின் மிக பெரிய உற்பத்தியாளர்களின் ஒன்றாகும் மேலும் நுகர்வோர்கள் மற்றும் சுகாதார தொடர்பான சேவைகளையும் இது வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் இதன் பொதுவான பங்கு டோவ் ஜோன்ஸ் தொழில்துறையின் சராசரி ஒரு அங்கமாகும். மற்றும் இந்த நிறுவனமானது ஃபார்ச்சூன் 500 இதழ் வெளியிடும் உலகில் உள்ள 500 மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில், இந்த நிறுவனமாகவும் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் நியூ ஜெர்ஸி மாநிலம், நியூ பிரன்சுவிக்கில் அமைந்துள்ளது. 250 க்கும் மேற்பட்ட இதன் துணை கொண்ட நிறுவனம், 57 நாடுகளில் செயல்படுகிறது. இதன் தயாரிப்புகள் 175 நாடுகளில் மீது சந்தைப்படுத்தப்படுகின்றன. மற்றும் ஜான்சன் & ஜான்சன் பல தயாரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் குழந்தைகளுக்காகத் தயரிக்கும் பெருட்கள் மிகவும் புகழ்பெற்றவைகளாகும். மேலும் தோல் அழகு உற்பத்திப் பொருள்கள், கண் தொடு வில்லைகள் (Contact Lens), முகப்பூச்சு சுத்தப்படுத்திகள் (face wash), மற்றும் காயங்களுக்குக் கட்டுப் போடுவதர்க்கு மருந்துகள் அடங்கியத் துணிகள் (bandages). ஆகியவைகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளாகும்.
![]() | |
வகை | பொதுவானது |
---|---|
நிறுவுகை | (1887 ஆம் ஆண்டு) |
நிறுவனர்(கள்) | ராபர்ட் வுட் ஜான்சன் I, ஜேம்ஸ் வூட் ஜான்சன், எட்வர்ட் மீட்ஜான்சன். |
தலைமையகம் | நியூ புரூன்ஸ்விக் நியூ ஜெர்சி., ஐக்கிய அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | வில்லியம் வெல்டேன் (இக் குழுமத்தின் தலைவர்) அலெக்ஸ் கோர்ஸ்கி (தலைமை நிர்வாக அதிகாரி) |
தொழில்துறை | மருத்துவ உபகரணங்கள் மருத்துவம் |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
பணியாளர் | 117,900 (2012)[1] |
இணையத்தளம் | JNJ.com |