![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f4/Justin_Anthony_Knapp_%2528cropped%2529.jpg/640px-Justin_Anthony_Knapp_%2528cropped%2529.jpg&w=640&q=50)
ஜஸ்டின் நாப்
From Wikipedia, the free encyclopedia
ஜஸ்டின் அந்தோனி நாப் (பிறப்பு: நவம்பர் 18, 1982),[1] அவரது நிகழ்நிலை புனைப்பெயரான கோவ்ஃப் என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் ஒரு அமெரிக்க விக்கிபீடியா பயனர் ஆவார், இவர் விக்கிபீடியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான திருத்தங்களை வழங்கிய முதல் நபர் ஆவார்.[2] மார்ச் 2020 நிலவரப்படி, நாப் ஆங்கில விக்கிபீடியாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான திருத்தங்களைச் செய்துள்ளார்.[3][4][5] ஏப்ரல் 18, 2012 முதல் நவம்பர் 1, 2015 வரையான காலகட்டத்தில் எல்லா நேரத்திலும் மிகவும் செயல்திறமுள்ள விக்கிபீடியா பங்களிப்பாளர்களில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். 2015 க்குப் பிறகு ஸ்டீவன் புரூட் நாப்பை முந்தினார்.
விரைவான உண்மைகள் ஜஸ்டின் நாப், பிறப்பு ...
மூடு