இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
சோபனா சமர்து (Shobhna Samarth 17 நவம்பர் 1916 - 9 பிப்ரவரி 2000) ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார். இவர் இந்தி திரைப்படத் துறையில் பேசும் திரைப்படங்களின் ஆரம்ப நாட்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் 1950 களில் முன்னணி பாத்திரங்களில் நடித்தார். இவர் மராத்தி சினிமாவில் முதன்முறையாக நடிக்கத் தொடங்கினார். இவரது முதல் இந்தி திரைப்படமான நிகஹென் நஃப்ரத் 1935 இல் வெளியிடப்பட்டது. ராம் ராஜ்யத்தில் (1943) சீதாவின் கதாபாத்திரத்திற்காக இவர் பரவலாக நினைவுகூரப்படுகிறார். 1997 ஆம் ஆண்டில், கலைக்கான பங்களிப்பிற்காக பிலிம்பேர் சிறப்பு விருது வழங்கப்பட்டது.[1]
சமர்த் பின்னர் தனது மகள்களான நூதன் மற்றும் தனுஜா நடித்த திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியுள்ளார்.[2]
சோபன 17 நவம்பர் 1916 அன்று பிரித்தானிய இந்தியாவின் பம்பாயில் பிறந்தார். இவரது இயற்பெயர் சரோஜ் சிலோத்திர் ஆகும். இவருடைய தந்தை பிரபாகர் சிலோத்ரி பம்பாயில் சிலோத்ரி வங்கியைத் தொடங்கிய "முன்னோடி வங்கியாளர்" ஆவார். இவரது பெறோருக்கு இவர் ஒரே குழந்தை ஆவார்.[3] இவரது தாயார் ரத்தன் பாய், 1936 இல், மராத்தியில் ( ஸ்வராஜ்யாச்சியா சீமேவார் ) ஃப்ரீண்டியர்ஸ் ஆஃப் ஃப்ரீடம் படத்தில் நடித்தார். சோபனா ஆரம்பத்தில் பம்பாயின் கதீட்ரல் பள்ளியில் ஒரு வருடம் படித்தார். 1928 ஆம் ஆண்டில், இவரது தந்தை நிதி இழப்பைச் சந்தித்தார், இவரது நிறுவனம் கலைக்கப்பட்டது. பின்னர் குடும்பம் 1931 இல் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர், அங்கு சோபனா பால்ட்வின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார் . இவருடைய தாய் ஒரு மராத்தி பள்ளியில் கற்பித்தல் பணியினை மேற்கொண்டார். அந்த ஆண்டு டிசம்பரில், இவரது தந்தை மாரடைப்பால் இறந்தார், தாயும் மகளும் தனது தாய் மாமாவுடன் தங்குவதற்கு மும்பை சென்றனர். சோபனா ஒரு கான்வென்ட் பள்ளியில் படித்தார், ஆனால் அதற்குள் இவர் படங்களில் சேர்ந்ததால் தனது மெட்ரிகுலேஷன் கல்வியினைத் தொடர முடியவில்லை. இவளுடைய மாமா இவள் திரைப்படங்களில் நடிப்பதை எதிர்த்தார், அதனால் இவரும் இவருடைய தாயும் இவரது வீட்டை விட்டு வெளியேறினர்.[4] ). சோபனா கற்பித்தல் பணியினை மேற்கொண்டார் இவர் தனது வருங்கால கணவர் குமார்சன் சமர்த்தை சந்தித்தார், இவர் ஜெர்மனியில் இருந்து திரும்பி வந்து திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார். இவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்,பின்னர் இவர் தனது முதல் படத்தின் வேலைகளைத் தொடங்கினார்.[5]
சோபனாவின் முதல் திரைப்படம் "ஆர்பன்சு ஆஃப் சொசைட்டி" இது 1935 ஆம் ஆண்டில் வெளியானது, இதனை மாஸ்டர் விநாயக் இயக்கினார். இந்தத் திரைப்படம் நிகாகே நஃபரது அல்லது விலாசி ஈசு வர் என்றும் அழைக்கப்படுகிறது.இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.[5][6] உருது மற்றும் மராத்தியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் இருமொழிகளில் வெளியானது சோபனா ஒரு நேர்காணலில், படப்பிடிப்பின் போது உருது எதுவும் தெரியாது என்றும், உரையாடல்களை எழுதிவைத்துப் பின்னர் பேசியதாகவும்,பின்னர் தான் அந்த மொழியினைக் கற்றுக் கொண்டதாகவும் கூறினார்.[4] இவர் பதின்மூன்று மாதங்கள் கோலாப்பூர் சினெடோனுடன் இருந்தார், ஆனால் ஒரே ஒரு படத்தில் நடித்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.