சோடியம் பைசல்பைட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
சோடியம் பைசல்பைட்டு (Sodium bisulfite) என்பது NaHSO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் ஐதரசன் சல்பைட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. உண்மையில் சோடியம் பைசல்பைட்டு ஒரு சேர்மமாக கருதப்படுவதில்லை[2]. மாறாக, நீரில் கரைத்தால் சோடியம் அயனி, பைசல்பைட்டு அயனி போன்றவற்றை கொடுக்கும் உப்புக்களின் கலவையாக இது பார்க்கப்படுகிறது. வெண்மை நிறத்தையும் கந்தக டை ஆக்சைடின் நெடியையும் சோடியம் பைசல்பைட்டு பெற்றுள்ளது. முழுமையாக வரையறுக்கப்படாவிட்டாலும் கூட இதற்கு ஐரோப்பிய எண் 222 என்ற அடையாளம் வழங்கப்பட்டு உணவு கூட்டுசேர் பொருளாக வகைப்படுத்தப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஐதரசன் சல்பைட்டு | |
வேறு பெயர்கள்
ஐ222, சோடியம் பைசல்பைட்டு | |
இனங்காட்டிகள் | |
7631-90-5 Y | |
ChEBI | CHEBI:26709 Y |
ChEMBL | ChEMBL1689285 N |
ChemSpider | 571016 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23665763 |
வே.ந.வி.ப எண் | VZ2000000 |
| |
பண்புகள் | |
NaHSO3 | |
வாய்ப்பாட்டு எடை | 104.061 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
மணம் | இலேசான கந்தக டைஆக்சைடு நெடி |
அடர்த்தி | 1.48 கி/செ.மீ3 |
உருகுநிலை | 150 °C (302 °F; 423 K) |
கொதிநிலை | 315 °C (599 °F; 588 K) |
42 கி/100 மி.லி | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.526 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) |
R-சொற்றொடர்கள் | R22 R31 |
S-சொற்றொடர்கள் | (S2), S25, S46 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
இல்லை[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 5 மி.கி/மீ3[1] |
உடனடி அபாயம் |
N.D.[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் சல்பைட்டு சோடியம்மெட்டாபைசல்பைட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பொட்டாசியம் பைசல்பைட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு