சைரசு
From Wikipedia, the free encyclopedia
பேரரசர் சைரசு (Old Persian: 𐎤𐎢𐎽𐎢𐏁[5], IPA: [kʰuːrʰuʃ], Kūruš[6], Persian: کوروش بزرگ, Kūrošé Bozorg) (கிமு 600 அல்லது 576 – டிசம்பர்[7][8] கிமு 530) முதலாவது சொராஷ்டிரிய சமயப் பாரசீகப் பேரரசர் ஆவார். ஆக்கிமெனிட் வம்சத்தின் கீழ் அகாமனிசியப் பேரரசை நிறுவியவரும் இவரே. உலக அளவிலான இப்பேரரசு உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவர் பாரசீகத்தின் இரண்டாவது சைரசு, மூத்த சைரசு போன்ற பெயர்களினாலும் அறியப்படுகின்றார்.
மகா சைரசு 𐎤𐎢𐎽𐎢𐏁 | |
---|---|
| |
ஒரு கெம்கெம் மகுடத்துடன் மகா சைரசு, பசர்கதேயில் சைரசுவின் இருப்பிடத்தில் உள்ள ஒரு புடைப்புச் சிற்பம்[1] | |
அகாமனிசியப் பேரரசின் மன்னர்களின் மன்னர் | |
ஆட்சிக்காலம் | 559–530 பொ. ஊ. மு. |
முன்னையவர் | பேரரசு நிறுவப்பட்டது |
பின்னையவர் | இரண்டாம் காம்பிசெஸ் |
பாரசீகத்தின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | 559–530 பொ. ஊ. மு. |
முன்னையவர் | முதலாம் காம்பிசெசு |
பின்னையவர் | இரண்டாம் காம்பிசெஸ் |
மீதியாவின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | 549–530 பொ. ஊ. மு. |
முன்னையவர் | அசுதயகெசு |
பின்னையவர் | இரண்டாம் காம்பிசெஸ் |
லிடியாவின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | 547–530 பொ. ஊ. மு. |
முன்னையவர் | கிரீசசு |
பின்னையவர் | இரண்டாம் காம்பிசெஸ் |
பாபிலோனின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | 539–530 பொ. ஊ. மு. |
முன்னையவர் | நபோனிதுசு |
பின்னையவர் | இரண்டாம் காம்பிசெஸ் |
பிறப்பு | அண். 600 பொ. ஊ. மு.[2] அன்சான், பெர்சிசு (தற்கால பாருசு மாகாணம், ஈரான்) |
இறப்பு | 4 திசம்பர் 530 பொ. ஊ. மு.[3] (அகவை 70) சிர் தாரியா, நடு ஆசியா |
புதைத்த இடம் | பசர்கதே |
பட்டத்து இராணி | கசந்தனே, மீதியாவின் அமிதிசு |
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு | அகாமனிசிய அரசமரபு (தெயிசிபிது) |
தந்தை | முதலாம் கம்பிசசு |
தாய் | மீதியாவின் மந்தேன் |
இவரது காலத்திலேயே இப் பேரரசு பண்டைய அண்மை கிழக்குப் பகுதிகளில் இருந்த நாகரிகமடைந்த நாடுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது. பின்னர் இது தென்மேற்கு ஆசியாவின் பெரும்பகுதி; நடு ஆசியாவின் பெரும்பகுதி; மேற்கே எகிப்து, கிழக்கே சிந்து நதி வரையும் உள்ள பகுதிகளையும் கைப்பற்றி அக்காலம் வரை அறியப்பட்டவற்றிலும் மிகவும் பெரிதான பேரரசாக விளங்கியது.
சைரசின் ஆட்சி 29 தொடக்கம் 30 ஆண்டுகள் வரை நீடித்தது. முதலில் சைரசு, மீடியாப் பேரரசு, லிடியப் பேரரசு, புது பாபிலோனியப் பேரரசு ஆகியவற்றை வரிசையாகக் கைப்பற்றியதன் மூலம் தனது பேரரசை நிறுவினார். பபிலோனியாவைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அல்லது பின்னர் நடு ஆசியாவுக்குப் படை நடத்திச் சென்று அப் பகுதிகளில் இருந்த எல்லா நாடுகளையும் சைரசு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். சைரசு எகிப்துக்குள் நுழையவில்லை. கிமு 510 டிசம்பரில் நிகழ்ந்த போரில் சைரசு இறந்துவிட்டார். இவரைத் தொடர்ந்து இவரது மகன் இரண்டாம் கம்பிசசு ஆட்சிக்கு வந்தார். குறுகிய காலமே ஆட்சி செய்த இவர் தனது காலத்தில் எகிப்து, நூபியா, சைரனைக்கா ஆகிய நாடுகளையும் பேரரசில் இணைத்தார்.
மனித உரிமைகள், அரசியல் மற்றும் இராணுவ மூலோபாயம், அத்துடன் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாகரீகங்களின் மீதான அவரது பெருமளவான செல்வாக்கிற்கும் சைரஸ் தி கிரேட் நன்கு அறியப்பட்டவர். நவீன ஈரானிய மாகாணமான ஃபார்ஸுடன் ஒப்பிடப்பட்ட பெர்சியஸிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட நிலையில், நவீன ஈரானின் தேசிய அடையாளத்தை வரையறுப்பதில் அரசர் சைரஸ் ஒரு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசர் சைரஸ் மற்றும் பண்டைய உலகில் உள்ள அக்கிமெனீடுகளின் செல்வாக்கு புகழ்பெற்ற கிரேக்க நகரமான ஏதென்ஸ் வரை நீட்டிக்கப்பட்டது, அங்கு பல ஏதெனியர்கள் அக்கேமினிய பெர்சிய கலாச்சாரத்தின் அம்சங்களை தங்கள் சொந்தமாக, ஒரு பரஸ்பர கலாசார பரிமாற்றத்தில் ஏற்றுக்கொண்டனர்.