![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/53/Serendah_Town_1.jpg/640px-Serendah_Town_1.jpg&w=640&q=50)
செரண்டா
From Wikipedia, the free encyclopedia
செரண்டா, (மலாய்: Serendah; ஆங்கிலம்: Serendah; சீனம்: 萬撓); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் (Hulu Selangor District) உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 23 கி.மீ. வடக்கே உள்ளது.
விரைவான உண்மைகள் செரண்டா, நாடு ...
செரண்டா | |
---|---|
Serendah | |
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°21′50″N 101°36′20″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | உலு சிலாங்கூர் மாவட்டம் |
நிர்வாக மையம் | கோலா குபு பாரு |
அரசு | |
• ஊராட்சி | உலு சிலாங்கூர் ஊராட்சி (Ulu Selangor District Council) |
• தலைவர் | நொராயினி பிந்தி ரோசுலான் (Noraini binti Roslan) |
பரப்பளவு | |
• மொத்தம் | 208.8 km2 (80.6 sq mi) |
ஏற்றம் | 72 m (236 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 94,762[1] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 48200 |
தொலைபேசி எண்கள் | +60-3 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | mdhs |
மூடு
செரெண்டா முன்பு காலத்தில் பல ஈயச் சுரங்கங்களின் தாயகமாக இருந்தது. இந்தச் சிறு நகரம், முன்பு பெரிய ஈயச் சுரங்க நகரமான ரவாங்கிற்கு (Rawang) ஒரு துணைக்கோள் நகரமாக இருந்தது.[2]
இந்த நகரம் இப்போது ஒரு நிலையான கட்டத்தில் வளர்ந்து வருகிறது. மற்றும் கோலாலம்பூர் மாநகருக்கு வெளியே உள்ள மிகப்பெரிய புறநகர்ப் பகுதியாகும். இது உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்கிம் (நகரம்) (Mukim) ஆகும்.[3]