செம்பிரமிடு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
செம்பிரமிடு (Red Pyramid, also called the North Pyramid) பண்டைய எகிப்தின், தச்சூர் நகரத்தில் மூன்று பெரிய பிரமிடுகளில் ஒன்றாகும். இது வடக்கு எகிப்தில் உள்ள கெய்ரோ நகரத்திற்கு அருகே அமைந்த பண்டைய தச்சூர் நகரத்தில் உள்ளது. இதனை கட்டியவர் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்ச மன்னர் சினெபெரு (கிமு 2613 - கிமு 2589) ஆவார். இதனைப் பெரிய அளவிலான சுண்ணக்கற்களைக் கொண்டு கட்டினார். இந்த பிரமிடு தச்சூர் நகரத்தில் அமைந்த மூன்று பிரமிடுகளான வளைந்த பிரமிடு மற்றும் கருப்பு பிரமிடுகளில் ஒன்றாகும். இது எகிப்தின் மூன்றாவது பெரிய பிரமிடு ஆகும்.
செம்பிரமிடு, தச்சூர், கீழ் எகிப்து | |
---|---|
சினெபெரு | |
ஆள்கூறுகள் | 29°48′30″N 31°12′21″E |
கட்டப்பட்டது | கிமு 2590 |
வகை | பிரமிடு |
பொருள் | சுண்ணக்கல் |
உயரம் | 105 மீட்டர்கள் (344 அடி) (200 cubits) |
தளம் | 220 மீட்டர்கள் (722 அடி) (420 cubits) |
கனவளவு | 1,694,000 கன சதுர மீட்டர்கள் (59,823,045 cu ft) |
சரிவு | 43°40' |
இப்பிரமிடு 105 மீட்டர்கள் (344 அடி) உயரம், அடிப்பாகம் 220 மீட்டர்கள் (722 அடி) அடிப்பாகமும், கனபரிமானம் 1,694,000 கன சதுர மீட்டர்கள் (59,823,045 cu ft) கனபரிமாணமும் கொண்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.