சென்னைத் துறைமுகம்
From Wikipedia, the free encyclopedia
சென்னைத் துறைமுகம் (Chennai Port) இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றாகும். அண்மைக் காலங்களில் முக்கியமான கொள்கலன் துறைமுகமாக மாறியுள்ள இது முன்னர் போக்குவரத்துக்கு உரிய முக்கிய துறைமுகமாகவே விளங்கியது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று ஆகும். தற்போது, சிங்கப்பூர், ஆங்காங், சாங்காய், சென்சென் ஆகிய துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய துறைமுகமாக இருப்பினும் வரும் ஆண்டுகளில் இது விரிவாக்கப்பட உள்ளது. தற்போது உலகின் 86 வது பெரிய கொள்கலன் துறைமுகமாக உள்ளது மற்றும் ஆண்டுக்கு சுமார் 140 மில்லியன் டன்களாக இதன்திறனை விரிவுபடுத்த திட்டங்கள் உள்ளன.[1][2]
விரைவான உண்மைகள் சென்னைத் துறைமுகம் Chennai Port, அமைவிடம் ...
சென்னைத் துறைமுகம் Chennai Port | |
---|---|
சென்னைத் துறைமுகம் | |
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | சென்னை (Madras) |
ஆள்கூற்றுகள் | 13.08441°N 80.2899°E / 13.08441; 80.2899 |
விவரங்கள் | |
திறக்கப்பட்டது | 1881 |
நிறுத்தற் தளங்கள் | 26 |
ஊழியர்கள் | 8,000 (2004) |
புள்ளிவிவரங்கள் | |
ஆண்டு கொள்கலன் அளவு | 1 மில்லியன் TEU (2008) |
வலைத்தளம் www.chennaiport.gov.in |
மூடு