![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/Senai_Town.jpg/640px-Senai_Town.jpg&w=640&q=50)
செனாய், ஜொகூர்
மலேசியா, ஜொகூர், கூலாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்பகுதி / From Wikipedia, the free encyclopedia
செனாய் (ஆங்கிலம்: Senai; மலாய்: Senai; சீனம்: 士乃) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், கூலாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்பகுதி. கூலாய் நகரிலிருந்து 4 கி.மீ. தெற்கிலும், ஸ்கூடாய் நகருக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் செனாய், நாடு ...
செனாய் | |
---|---|
Senai | |
ஜொகூர் | |
![]() செனாய் நகரம் | |
ஆள்கூறுகள்: 1°35′N 103°38′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 67,440 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 81000 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +07-5 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
மூடு
இந்த நகரம் இசுகந்தர் மலேசியாவின் (Iskandar Malaysia) முதன்மை மண்டலங்களில் ஒன்றாகும். இங்கு பல பெரிய பன்னாட்டு மின்னணு உற்பத்தியாளர்களின் தொழிற்சாலைகள் உள்ளன. அதன்வழி உள்ளூர் மக்கள் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன.