செதில் கவசம்
From Wikipedia, the free encyclopedia
செதில் கவசம் (ஆங்கிலம்:Scale armour, ஸ்கேல் ஆர்மர்) என்பது ஒரு துணி, அல்லது தோலை பின்புலமாகக் கொண்டு, பல தனித்தனியான சிறிய செதில்களை (தட்டுகள்) ஒன்றன்மீது ஒன்றாக இணைத்து செய்யப்படும் ஒரு முற்கால கவசம் ஆகும்.[1] செதில் கவசம் பல்வேறு கலாச்சாரங்களை சார்ந்த வீரர்கள் மற்றும் குதிரைகளால் அணியப்பட்டிருந்தன. செதில்களை செய்ய வெண்கலம், இரும்பு, பதனிடா விலங்குத் தோல் (rawhide), பதனிட்ட தோல் (leather), கொதிக்கவைக்கப்பட்ட தோல் (cuir bouilli), வித்துக்கள், கொம்பு, ஏறும்புண்ணிச் (pangolin) செதில்கள், மற்றும் பண்டைய சீனாவில், காகிதம் முதலிய மூலபொருட்கள் பயன்படுத்தப் பட்டன. இந்த வேற்றுமைகள் மூலப்பொருட்களின் கிடைக்கும் தன்மையை பொறுத்தது.