![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5b/Subang_Jaya_at_Dusk.jpg/640px-Subang_Jaya_at_Dusk.jpg&w=640&q=50)
சுபாங் ஜெயா
மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள மாநகரம். / From Wikipedia, the free encyclopedia
சுபாங் ஜெயா, (மலாய்: Subang Jaya; ஆங்கிலம்: Subang Jaya; சீனம்: 梳邦再也); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள மாநகரம். மலேசியாவில் மிகப் பெரிய நகரங்களில் சுபாங் ஜெயாவும் ஒரு நகரமாக அறியப் படுகிறது.
விரைவான உண்மைகள் சுபாங் ஜெயா, நாடு ...
சுபாங் ஜெயா | |
---|---|
Subang Jaya | |
மேலே இடமிருந்து வலமாக: SS16 சுபாங் ஜெயா சிட்டி சென்டர் (SJCC), சன்வே பிரமிட், சன்வே லகூன், பண்டார் சன்வே, புத்ரா ஹைட்ஸ், சுபாங் பேரட் | |
ஆள்கூறுகள்: 3°3′52″N 101°35′37″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
நகராண்மை | சுபாங் ஜெயா மாநகராட்சி |
அமைவு | 21 பிப்ரவரி 1976 |
மாநகர்த் தகுதி | 20 அக்டோபர் 2020 |
பரப்பளவு | |
• மொத்தம் | 70.41 km2 (27.19 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 7,25,070 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 47500, 47600, 47610, 47620, 47630 |
மலேசியத் தொலைபேசி எண் | +603-56, +603-80 |
மலேசியப் பதிவெண் | B |
இணையதளம் | portal |
மூடு
சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில், பண்டார் சன்வே (Bandar Sunway) நகர்ப் பகுதியைச் சேர்ந்த SS12 முதல் SS19 வரை; PJS7 / PJS9 / PJS11 வரையிலான குடியிருப்புப் பகுதிகளை இந்த மாநகரப் பகுதி கொண்டுள்ளது.
பெட்டாலிங் மாவட்டத்தில் பெட்டாலிங் ஜெயா; சா ஆலாம் ஆகிய மாநகரங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகிறது.[1]