![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Cylinder_Nabonidus_BM_WA91128.jpg/640px-Cylinder_Nabonidus_BM_WA91128.jpg&w=640&q=50)
சுடுமண் பாண்டம்
மண்ணைச்சுட்டு செய்யப்படும் படிமம் / From Wikipedia, the free encyclopedia
சுடுமண் பாண்டம் (Terracotta, terra cotta or terra-cotta (ஒலிப்பு [ˌtɛrraˈkɔtta]; இத்தாலிய மொழி: "சுட்ட மண்",[1] from the Latin terra cocta),[2] ஒருவகை மென்மையான களிமண்ணைக் கொண்டு உருவம் செய்து பின் அதனை சூளையில் சுட்டு வடிவத்தை கெட்டிப்படுத்துவர்.[3]சிவப்பு, காவி, ஆரஞ்சு நிற சுடுமண் மட்பாண்டங்கள், அரச முத்திரைகள், வரலாற்று குறிப்புகள், கடவுட் சிலைகள், விலங்குகளின் சிற்பங்கள், மேற்கூரையின் ஓடுகள், செங்கற்கள், பூந்தொட்டிகள், விளக்குகள், கழிவு நீர் குழாய்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் செய்ய பயன்படுத்தப்பட்டது.[4][5][6] கிமு 2,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், உருளை வடிவ சுடுமண் பாண்டங்களில் சுமேரியர்கள் ஆப்பெழுத்துகளில் தங்கள் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். மேலும் சுடுமண் பாண்டத்தில் சுமேரியக் கடவுளர்கள், சுமேரிய மன்னர்களின் உருவச் சிற்பங்கள் உருவாக்கினர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Horse_terracotta_in_Coimbatore_Airport.jpg/640px-Horse_terracotta_in_Coimbatore_Airport.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Cylinder_Nabonidus_BM_WA91128.jpg/640px-Cylinder_Nabonidus_BM_WA91128.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/Terracotta_Army%2C_View_of_Pit_1.jpg/640px-Terracotta_Army%2C_View_of_Pit_1.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8e/Terra-cotta_lamp.jpg/640px-Terra-cotta_lamp.jpg)
கி.மு. 210 காலத்திய முதலாவது சீனச் சக்கரவர்த்தி சின் ஷி ஹுவாங்கின் போர் வீரர்களைச் சித்தரிக்கும் சுடுமட்சிலைப் படை சிற்பங்கள் சாங்சி மாகாணத்திலுள்ள சிய்யான் என்னுமிடத்தின் லின்டோங் மாவட்டத்தில் உள்ளூர் விவசாயி ஒருவரால் 1974 இல் கண்டுபிடிக்கப்பட்டது. [7]
- எகிப்தின் 18-ஆம் வம்ச ஆட்சிக் காலத்திய பெண்ணின் சுடுமண் சிற்பம்
- கிமு 520 காலத்திய தம்பதியரின் சுடுமண் சிற்பம்
- கிமு 325-150 காலத்திய நடுத்தர கிரேக்கக் குடும்பப் பெண்ணின் சுடுமண் சிற்பம்
- குப்தப் பேரரசு காலத்திய சுடுமண் சிற்பங்கள்
- சுடுமண் கோயில், விஷ்ணுப்பூர், பாங்கூரா, இந்தியா
- கல்னா இந்து கோயிலின் சுட்மண் சிற்பங்கள்
- கோயில் சுவரில் சுடுமண் சிற்பங்கள், தினாஜ்பூர், வங்காளதேசம்
- சுடுமண் குதிரைகள்