தென் கொரிய நகரம் From Wikipedia, the free encyclopedia
சுங்ஜூ (Chungju) தென் கொரியாவின் வடக்கு சுங்செயோங் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இந்த நகரத்தின் புறநகரில் நாம்சன் மலை உள்ளது.
சுங்ஜூ
충주시 | |
---|---|
நகராட்சி | |
Korean transcription(s) | |
• Hangul | 충주시 |
• Hanja | 忠州市 |
• Revised Romanization | Chungju-si |
• McCune-Reischauer | Ch'ungju-si |
தென் கொரியாவில் அமைவிடம் | |
நாடு | தென் கொரியா |
வலயம் | ஓசெயோ |
நிர்வாகப் பிரிவுகள் | 1 eup, 12 myeon, 12 dong |
பரப்பளவு | |
• மொத்தம் | 153.45 km2 (59.25 sq mi) |
மக்கள்தொகை (நவம்பர் 2010) | |
• மொத்தம் | 2,18,098 |
அக்டோபரில் இங்கு நடக்கும் வருடாந்திர தற்காப்புக் கலைவிழாவிற்காக சுங்ஜூ புகழ்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர், பான் கி மூன் இங்குதான் தமது இளமைக் காலத்தில் வாழ்ந்திருந்தார்[1].
சுங்ஜூ அணை தென்கொரியாவின் மிகப்பெரிய பன்னோக்கு அணையாகும். இது பரந்த நீர்பரப்பைக் கொண்ட செயற்கை ஏரியை உருவாக்கியுள்ளது. அருகாமையில் வொரக்சான் குன்றும் சொங்னே பள்ளத்தாக்கும் அமைந்துள்ளன. மேலும் இப்பகுதியில் உள்ள குகைகளும் நீரூற்றுகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.[2]
2013ஆம் ஆண்டுக்கான உலக படகுவலிப்பு போட்டிகள் சுங்ஜூவின் டான்ஜியம் ஏரியில் ஆகத்து 25 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெற்றன.[3]
சுங்ஜூ இங்கு விளையும் ஆப்பிள் பழங்களுக்கு புகழ் பெற்றது. நீண்ட பகல்நேர சூரிய ஒளியும் வெப்பநிலை மாற்றங்களும் ஆப்பிள் மரங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆப்பிள் மரங்கள் நடப்பட்டன. 1912இலிருந்து அலுவல்முறையாக இங்கு பயிரிடப்படுகின்றது.[4]
சுங்ஜூவில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன: கொங்குக் பல்கலைக்கழகம், சுங்ஜூ பல்கலைக்கழகம். இவற்றைத் தவிர பல இளநிலை, இடைநிலை, உயர்நிலைப் பள்ளிகள் இங்குள்ளன.
தட்பவெப்ப நிலைத் தகவல், சுங்ஜூ (1981–2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 1.9 (35.4) |
5.1 (41.2) |
11.4 (52.5) |
19.4 (66.9) |
24.0 (75.2) |
27.6 (81.7) |
29.6 (85.3) |
30.2 (86.4) |
25.8 (78.4) |
20.0 (68) |
12.1 (53.8) |
5.0 (41) |
17.7 (63.9) |
தினசரி சராசரி °C (°F) | -4.2 (24.4) |
-1.3 (29.7) |
4.7 (40.5) |
11.7 (53.1) |
17.1 (62.8) |
21.7 (71.1) |
24.7 (76.5) |
24.9 (76.8) |
19.3 (66.7) |
12.4 (54.3) |
5.3 (41.5) |
-1.0 (30.2) |
11.2 (52.2) |
தாழ் சராசரி °C (°F) | -9.5 (14.9) |
-6.8 (19.8) |
-1.2 (29.8) |
4.4 (39.9) |
10.7 (51.3) |
16.4 (61.5) |
20.7 (69.3) |
20.8 (69.4) |
14.6 (58.3) |
6.8 (44.2) |
-0.1 (31.8) |
-6.0 (21.2) |
5.9 (42.6) |
பொழிவு mm (inches) | 21.2 (0.835) |
23.2 (0.913) |
44.9 (1.768) |
63.1 (2.484) |
88.7 (3.492) |
134.7 (5.303) |
293.5 (11.555) |
268.6 (10.575) |
148.9 (5.862) |
57.5 (2.264) |
47.2 (1.858) |
21.1 (0.831) |
1,212.7 (47.744) |
% ஈரப்பதம் | 72.9 | 69.0 | 65.7 | 60.4 | 64.3 | 70.4 | 77.4 | 78.5 | 78.4 | 76.2 | 75.2 | 74.9 | 71.9 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) | 7.1 | 6.7 | 8.1 | 7.9 | 8.7 | 9.4 | 14.8 | 14.1 | 8.6 | 6.4 | 8.1 | 7.2 | 107.1 |
சூரியஒளி நேரம் | 168.7 | 175.6 | 203.0 | 233.0 | 242.9 | 219.9 | 178.7 | 197.2 | 188.7 | 193.5 | 152.7 | 156.5 | 2,310.3 |
ஆதாரம்: கொரிய வானிலைமைய நிர்வாகம்[5] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.