![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6d/%25E0%25A6%25B8%25E0%25A6%25BF%25E0%25A6%25B2%25E0%25A7%2587%25E0%25A6%259F_%25E0%25A6%2586%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%2595_%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%259F_%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A7%2587%25E0%25A6%25A1%25E0%25A6%25BF%25E0%25A6%25AF%25E0%25A6%25BC%25E0%25A6%25BE%25E0%25A6%25AE.jpg/640px-%25E0%25A6%25B8%25E0%25A6%25BF%25E0%25A6%25B2%25E0%25A7%2587%25E0%25A6%259F_%25E0%25A6%2586%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%2595_%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%259F_%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A7%2587%25E0%25A6%25A1%25E0%25A6%25BF%25E0%25A6%25AF%25E0%25A6%25BC%25E0%25A6%25BE%25E0%25A6%25AE.jpg&w=640&q=50)
சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம்
துடுப்பாட்ட விளையாட்ட்ரங்கம் / From Wikipedia, the free encyclopedia
சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம் (Sylhet Divisional Stadium) வங்காளதேசத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள சில்ஹெட் நகரத்திலுள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கம் ஆகும். 2014 ஐசிசி உலக இருபது20, 2014 ஐசிசி மகளிர் உலக இருபது20 ஆட்டங்கள் இங்கு நடந்தேற இருப்பதால் இவ்வரங்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.[4] இந்த அரங்கில் முதல் பன்னாட்டு துடுப்பாட்டம் மார்ச் 17, 2014 அன்று அயர்லாந்து அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையே நடைபெற உள்ளது; இந்த பன்னாட்டு இருபது20 ஆட்டம் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டிகளின் அங்கமாகும். இந்த அரங்கில் 2014 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிகளின் அனைத்து குழுநிலை ஆட்டங்களும் நடைபெற உள்ளன.[5]
விரைவான உண்மைகள் அரங்கத் தகவல், அமைவிடம் ...
சில்ஹெட் விளையாட்டரங்கம் | |
![]() | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | சில்ஹெட், வங்காளதேசம் |
உருவாக்கம் | 2007 [1] |
இருக்கைகள் | 13,500[2] |
உரிமையாளர் | தேசிய விளையாட்டு அவை[3] |
இயக்குநர் | தேசிய விளையாட்டு அவை |
குத்தகையாளர் | சில்ஹெட் கோட்ட துடுப்பாட்ட அணி பீனிபசார் விளையாட்டுக் கழகம் |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் இ20ப | 17 மார்ச் 2014:![]() ![]() |
கடைசி இ20ப | 21 மார்ச் 2014:![]() ![]() |
13 மார்ச் 2014 இல் உள்ள தரவு மூலம்: சில்ஹெட் விளையாட்டரங்கம், கிரிக்இன்ஃபோ |
மூடு