சியாங் ராய் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

சியாங் ராய் மாகாணம்map

சியாங் ராய் மாநிலம் (ஆங்கிலம்: Chiang Rai Province; தாய்: เชียงราย); என்பது தாய்லாந்து நாட்டின் வடகோடியில் அமைந்த மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தின் தலைநகரம் சியாங் ராய் நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் சியாங் ராய்Chiang Rai, தலைநகரம் ...
சியாங் ராய்
Chiang Rai
மாநிலம்
(Province)
เชียงราย
Thumb
கொடி
Thumb
சின்னம்
Thumb
தாய்லாந்து நாட்டின் வடக்கில் அமைந்த சியாங் ராய் மாநிலத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°54′N 99°49′E
தலைநகரம்சியாங் ராய்
அரசு
  ஆளுநர்நரோன்சக் ஒசோத்தனகோரன் (ஏப்ரல், 2017 முதல்)
பரப்பளவு
  மொத்தம்11,678 km2 (4,509 sq mi)
மக்கள்தொகை
 (2017)
  மொத்தம்12,87,615
  அடர்த்தி110/km2 (290/sq mi)
மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  HDI (2009)0.752 (high)
அஞ்சல் சுட்டு எண்
57xxx
தொலைபேசி குறியீடு எண்053
வாகனப் பதிவுเชียงราย
தாய்லாந்து இராச்சியத்தில் இணைந்த நாள்1910
தாய்லாந்து இராச்சியத்தில் இணைந்த நாள்1932
இணையதளம்http://www.chiangrai.go.th
மூடு

இந்த மாநிலத்தின் வடக்கில் மியான்மர் நாட்டின் சான் மாநிலமும், கிழக்கில் லாவோஸ் நாட்டின் போக்கியா மாநிலமும், தெற்கில் தாய்லாந்தின் பயோ மாநிலமும், தென்மேற்கில் லாம்பாங் மாநிலமும் மற்றும் மேற்கில் சியாங் மை மாநிலமும் எல்லைகளாக உள்ளன.

அபின் அதிக அளவில் உற்பத்தியாகும் தென்கிழக்காசியாவின் தங்க முக்கோணத்தில் அமைந்த பகுதிகளில் இம்மாகாணமும் ஒன்றாகும்.

புவியியல்

கனிம வளம் மிகுந்த சியாங் ராய் மாநிலம், கடல் மட்டத்திலிருந்து சராசரி 580 மீட்டர் உயரத்தில் உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து, மியான்மர் மற்றும் லாவோஸ் நாடுகளை இணைக்கும், உலகில் அதிக அளவு அபின் உற்பத்தியாகும், தங்க முக்கோணத்தில் [1]சியாங் ராய் மாகாணம் அமைந்துள்ளது.

இம்மாநிலத்தில் பாயும் மேகோங் ஆறு லாவோஸ் நாட்டின் எல்லையாகவும், மே சாய் ஆறு மற்றும் ருவாக் ஆறுகள் மியான்மர் நாட்டு எல்லையாகப் பிரிக்கிறது.

இம்மாநிலத்தின் கிழக்குப் பகுதிகள் ஆற்றுச் சமவெளியாகவும், வடக்கிலும், மேற்கிலும் குன் தாங், பி பான் நாம் மற்றும் தயின் லாவோ மலைத்தொடர்களையும் கொண்டது.

வரலாறு

கிபி 7ஆம் நூற்றாண்டு முதல் இம்மாநிலத்தில் மக்கள் வாழ்கின்றனர். கிபி 13ம் நூற்றாண்டில் இப்பகுதி லன்னா இராச்சியத்தின் (Lanna Kingdom) கீழ் வந்தது. கிபி 1786 முதல் இம்மாநிலம் பர்மியர்கள் கைப்பற்றினர்.

1910 முதல் சியாங் ராய் மாநிலம், லன்னா இராச்சியத்தின் பகுதியாக மாறியது. பின்னர் தாய்லாந்து நாட்டின் தன்னாட்சி மாநிலமாக விளங்குகிறது.

மக்கள்தொகை பரம்பல்

11,678 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 12,87,615 ஆகும். [2]பெரும்பான்மையான மக்கள் காம் முவாங் மொழி பேசும் தாய்லாந்து மக்கள் ஆவார்.

மக்கள்தொகையில் 12.5% தாய்லாந்து பழங்குடி மக்கள் ஆவார். தாய்-சீனா கலப்பின மக்களும் வாழ்கின்றனர்.

நிர்வாகப் பிரிவுகள்

Thumb
சியாங் ராய் மாநிலத்தின் 18 மாவட்டங்களைக் காட்டும் வரைபடம்

நிர்வாக வசதிக்காக சியாங் ராய் மாநிலம் 18 மாவட்டங்களாகவும், 124 துணை மாவட்டங்களாகவும், 1,751 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

  • 1 முயியாங் சியாங் ராய் மாவட்டம்
  • 2 வியாங் சாய் மாவட்டம்
  • 3 சியாங் கோங் மாவட்டம்
  • 4 தியோங் மாவட்டம்
  • 5 பான் மாவட்டம்
  • 6 பா தாயித் மாவட்டம்
  • 7 மோய் சான் மாவட்டம்
  • 8 சியாங் சாயின் மாவட்டம்
  • 9 மோய் சாய் மாவட்டம்
    • 10 மாயி சுவாய் மாவட்டம்
    • 11 வியாங் பா போ மாவட்டம்
    • 12 பாயா மெங்கிராய் மாவட்டம்
    • 13 வியாங் கேயின் மாவட்டம்
    • 14 குங் தான் மாவட்டம்
    • 15 மாயி பா லுவாங் மாவட்டம்
    • 16 மாயி லாவோ மாவட்டம்
    • 17 வியாங் சியாங் ருங் மாவட்டம்
    • 18 தோய் லுவாங் மாவட்டம்

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

ஈரானின் கோஸ்ரவி நகரத்தையும், இந்தோசீனாவின் டென்ஸ்பர் நகரத்தையும் இணைக்கும் 13,000 கிமீ நீளம் (8,000 மைல்) கொண்ட ஆசிய நெடுஞ்சாலை 2 இம்மாகாணத்தின் வழியாக செல்கிறது.

ருசியா, சீனா, மியான்மர் வழியாகச் செல்லும் 7,331 கிமீ நீளம் கொண்ட ஆசிய நெடுஞ்சாலை 3 சியாங் ராய் மாகாணத்தின் வழியாகச் செல்கிறது.

இதனையும் காண்க

Thumb

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.