சிப்பாங் மாவட்டம்
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சிப்பாங் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Sepang; ஆங்கிலம்: Sepang District; சீனம்: 雪邦縣) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம்; மேற்கில் கோலா லங்காட் மாவட்டம்; வட மேற்கில் கிள்ளான் மாவட்டம்; கிழக்கில் உலு லங்காட் மாவட்டம்; ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இதன் தலைநகரம் சாலாக் திங்கி (Salak Tinggi).
விரைவான உண்மைகள் சிப்பாங் மாவட்டம், நாடு ...
சிப்பாங் மாவட்டம் | |
---|---|
Daerah Sepang | |
சிப்பாங் மாவட்டம் அமைவிடம் சிலாங்கூர் | |
ஆள்கூறுகள்: 2°45′N 101°40′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | சிப்பாங் மாவட்டம் |
தொகுதி | சாலாக் திங்கி |
உள்ளூராட்சி | சிப்பாங் நகராட்சி மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | ரோசுலினா ஜானி |
பரப்பளவு | |
• மொத்தம் | 599.66 km2 (231.53 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 3,24,935 |
• அடர்த்தி | 540/km2 (1,400/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 43xxx, 47xxx, 62xxx, 63xxx, 64xxx |
தொலைபேசி எண்கள் | +6-03-8 |
போக்குவரத்து பதிவெண்கள் | B |
மூடு
மலேசியாவில் பிரபலமான ’சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் சைபர்ஜெயா (Cyberjaya) நகரம், இந்தச் சிப்பாங் மாவட்டத்தில் தான் அமைந்து உள்ளது.