Remove ads
From Wikipedia, the free encyclopedia
சினாய் தீபகற்பம் (Sinai Peninsula அல்லது சினாய்) என்பது எகிப்தில் உள்ள முக்கோண தீபகற்பம் ஆகும். இது வடக்கே மத்தியதரைக் கடலுக்கும், தெற்கே செங்கடலுக்கும் இடையில் ஆபிரிக்காவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் ஒரு நிலப் பாலமாக உள்ளது. இதன் பரப்பளவு கிட்டத்தட்ட 60,000 கிமீ² ஆகும்.[1]
சினாய் தீபகற்பத்தில் அமைந்துள்ள சினாய் மலையின் பெயரின் காரணமாக இந்த தீபகற்பம் நவீன காலங்களில் சினாய் என்ற பெயரைப் பெற்றதாக என்பதாக கருதப்படுகின்றது. இந்த மலை ஆபிரகாமிய மதங்களின் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும்.
சினாய் தீபகற்பம் பண்டையக் கால எகிப்தின் ஒரு பகுதியாகும். எகிப்தின் மற்ற பகுதிகளைப் போலவே வெளிநாடுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. 1517-1867 காலப்பகுதியில் உதுமானிய பேரரசினாலும், 1882 - 1956 வரையில் பிரித்தானியாவினாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 1967 ஆம் ஆண்டில் ஆறு நாள் போரில் இஸ்ரேல் சினாய் மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. 1973 ஆம் ஆண்டு சினாய் தீபகற்பத்தை இஸ்ரேலிடம் இருந்து மீட்டெடுக்க எகிப்து யேம் கீப்பர் போரை தொடங்கியது. போரில் எகிப்து தோல்வியுற்றது. 1979 ஆம் ஆண்டு இஸ்ரேல் - எகிப்து சமாதான உடன்படிக்கையின் விளைவாக 1982 ஆம் ஆண்டில் இஸ்ரேல் தபாவின் சர்ச்சைக்குரிய பிரதேசத்தை தவிர்த்து சினாய் தீபகற்பத்தின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் திரும்பியது. சினாய் இன்றைய காலகட்டத்தில் அதன் இயற்கை அமைப்பு, வளமான பவளப்பாறைகள் மற்றும் மதங்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காரணமாக சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
சினாய் முக்கோண தீபகற்பமாகும். இதன் வடக்கு கரை மத்தியதரைக் கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. செங்கடலின் சூயஸ் வளைகுடா தென்மேற்கு கரையோரத்திலும், அகபா வளைகுடா தென்கிழக்கு கரையோரத்திலும் அமையப்பெற்றுள்ளது. சினாய் தீபகற்பமானது 125 கி.மீ (78மைல்) நிலப்பரப்புடைய சூயஸ் குறுநிலத்தினால் ஆப்பிரிக்க கண்டத்துடனும், 200 கி.மீ (120மைல்) நிலப்பரப்புடைய கிழக்கு குறுநிலத்தினால் ஆசிய நிலப்பகுதியுடன் இணைகின்றது. தீபகற்பத்தின் கிழக்கு கரையானது அராபியத் தட்டை ஆப்பிரிக்க தட்டிலிருந்து பிரிக்கின்றது. தெற்கு முனையில் ராஸ் முகமது பூங்கா அமைந்துள்ளது.[2]
சினாய் தீபகற்பம் பெரும் பகுதி எகிப்தின் நிர்வாகத்தின் கீழ் வடக்கு சினாய் (கணுப் சினா) மற்றும் தெற்கு சினா (ஷமல் சினா) என இரு பெரும் நிலப்பரப்புக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[3] இவ்விரண்டும் மொத்தமாக சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் (23,000 சதுர மைல்) பரப்பையும், 2013 ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 597,000 மக்கள் தொகையையும் கொண்டுள்ளது. சினாயின் மிகப்பெரிய நகரம் வடக்கு சினாயின் தலைநகரான அரிஷ் ஆகும். வேறு பெரும் நகரங்களான சர்ம்-எல் சேக், எல்-டோர் என்பன தென் கடற்கரையில் காணப்படுகின்றன. சினாயின் உட்பகுதி வறண்ட நிலங்கள் (பாலைவனங்கள்), மலைகள் என்பவற்றுடன் குறைந்த மக்கள் தொகை கொண்டது. உட்பகுதியில் செயிண்ட கேத்தரின் மற்றும் நெகல் ஆகியவை பெரும் குடியேற்றங்கள் ஆகும்.[3]
சினாயின் மலைப்பாங்கான நிலப்பரப்பு, உயரம் என்பவற்றின் காரணமாக எகிப்தின் குளிரான மாகாணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. சினாயின் சில நகரங்களில் குளிர்கால வெப்பநிலை −16 °C (3 °F) ஐ அடைகின்றது. [சான்று தேவை]
சினாயின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை பங்குவகிக்கின்றது. சுற்றுலாத் துறையில் சினாயின் அழகிய இடங்களும் (பவளப்பாறை உட்பட), மதக் கட்டமைப்புகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. சினாயில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக சினாய் மலை (ஜபல் மூசா) மற்றும் புனித கேத்தரின் தேவாலயம் என்பன கருதப்படுகின்றன. உலகின் மிகப் பழமையான கிறிஸ்தவ தேவாலயமாக புனித கேத்தரின் தேவாலயம் கருதப்படுகிறது. ஷர்ம் எல்-சேக், தக்ஷஆப், நுவேபா என்பன கடற்கரை பொழுது போக்கிடங்கள் ஆகும். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஈலட், இஸ்ரேலில் இருந்து தபா எல்லைக் கடவையினாலும், கெய்ரோவிலிருந்து இருந்து சாலை வழியாக அல்லது ஜோர்தானில் உள்ள அகபாவில் இருந்து படகு மூலமும் ஷர்ம் எல்-சேக் விமான நிலையத்தை அடைகின்றனர். [சான்று தேவை]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.