From Wikipedia, the free encyclopedia
சிசுபால்கர் (Sisupalgarh or Sisupalagada), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் குர்தா மாவட்டத்தில் அமைந்த சிதைந்த கோட்டைகளுடன் கூடிய தொல்லியல் களம் ஆகும்.[1] இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராக விளங்கியது. மன்னர் காரவேலரின் கலிங்கநகரம், பேரரசர் அசோகரின் நிறுவிய தோசாலியுடன் சிசிபால்கர் தொல்லியல் களம் தொடர்புறுத்தப்படுகிறது.இத்தொல்லியல் களத்தில் கிமு 6-ஆம் நூற்றாண்டு காலத்திய சிதைந்த கோட்டைகளின் கற்தூண்கள் இன்றளவும் காட்சியளிக்கிறது.[2]
ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் நகரத்திற்கு அருகில் சிசுபால்கர் தொல்லியல் களம் அமைந்துள்ளது. இத்தொல்லியல் களத்தை பி. பா. லால் கண்டறிந்து, 1948-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்தார். இத்தொல்லியல் களம் கிமு 4-ஆம் நூற்றாண்டில் சிறப்புடன் விளங்கியது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.