![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Sarawak_State_Legislative_Assembly.svg/langta-640px-Sarawak_State_Legislative_Assembly.svg.png&w=640&q=50)
சரவாக் மாநில சட்டமன்றம்
From Wikipedia, the free encyclopedia
சரவாக் மாநில சட்டமன்றம் அல்லது சரவாக் சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Sarawak; ஆங்கிலம்: Sarawak State Legislative Assembly; சீனம்: 砂拉越州议会; ஜாவி: ديوان اوندڠن نڬري سراوق) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.
சரவாக் மாநில சட்டமன்றம் Sarawak State Legislative Assembly Dewan Undangan Negeri Sarawak | |
---|---|
19-ஆவது சட்டப் பேரவை | |
![]() சரவாக் மாநில சட்டமன்ற சின்னம் | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 8 செப்டம்பர் 1867 |
தலைமை | |
துணைப் பேரவைத் தலைவர் | இட்ரிசு புவாங் (Idris Buang) 11 பிப்ரவரி 2022 முதல் |
எதிர்க்கட்சித் தலைவர் | வோங் சூன் கோ (Wong Soon Koh), பிஎஸ்பி 9 நவம்பர் 2020 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 82 |
![]() | |
அரசியல் குழுக்கள் | ஆண்டு 14.08.2022 அரசாங்கம் (76) நம்பிக்கை மற்றும் வழங்கல் (1) எதிர்க்கட்சிகள் (5) பாக்காத்தான் (2)
|
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 18 டிசம்பர் 2021 |
அடுத்த தேர்தல் | 15 ஏப்ரல் 2027 |
கூடும் இடம் | |
![]() | |
New Sarawak State Legislative Assembly Building, Petra Jaya, Kuching, Sarawak புதிய சரவாக் மாநில சட்டமன்ற கட்டடம், பெட்ரா ஜெயா, கூச்சிங், சரவாக் | |
வலைத்தளம் | |
duns |
மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான சரவாக் மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி சரவாக் மாநிலச் சட்டமன்றம் 82 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றமாகவும் அறியப்படுகிறது.
சரவாக் மாநிலத்தின் சட்டமன்ற முறைமை ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறைமையை (Westminster Parliamentary System) பின்னணியாகக் கொண்டது. சரவாக், கூச்சிங் மாநகரில், புதிய சரவாக் மாநில சட்டமன்ற (New Sarawak State Legislative Assembly Building) கட்டடத்தில் சரவாக் மாநிலப் பேரவை கூடுகிறது.