சரத் பாபு
தமிழ்த் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
சரத்பாபு (Sarath Babu, 31 சூலை 1951 – 22 மே 2023) தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973-இல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் பட்டினப்பிரவேசம் என்ற கே. பாலசந்தரின் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் சரத்பாபு, பிறப்பு ...
சரத்பாபு | |
---|---|
பிறப்பு | சத்யம் பாபு டிக்சித்துலு (1951-07-31)31 சூலை 1951 அமடலவலசை, சென்னை மாநிலம் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம்), இந்தியா |
இறப்பு | மே 22, 2023(2023-05-22) (அகவை 71) ஐதராபாது, தெலங்காணா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1973–1923 |
வாழ்க்கைத் துணை | ரமா பிரபா (1974–1988 மணமுறிவு)[1] சினேகா நம்பியார் (1990–2011 மணமுறிவு) |
மூடு