![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7d/Gabungan_Rakyat_Sabah_GRS.jpg/640px-Gabungan_Rakyat_Sabah_GRS.jpg&w=640&q=50)
சபா மக்கள் கூட்டணி
சபா மாநிலத்தில் ஓர் அரசியல் கூட்டணி / From Wikipedia, the free encyclopedia
சபா மக்கள் கூட்டணி அல்லது ஜிஆர்எஸ் (ஆங்கிலம்: Sabah People's Coalition அல்லது (GRS Party); மலாய்: Gabungan Rakyat Sabah (GRS); சீனம்: 沙巴人民聯盟; ஜாவி: ݢابوڠن رعيت سابه) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கூட்டணியாகும். இந்த அரசியல் கூட்டணியின் முதல் தலைவர் அஜி நூர் (Hajiji Noor) ஆவார்.[6][7]
விரைவான உண்மைகள் சபா மக்கள் கூட்டணி Sabah People's Coalition, சுருக்கக்குறி ...
சபா மக்கள் கூட்டணி Sabah People's Coalition | |
---|---|
Gabungan Rakyat Sabah | |
![]() | |
சுருக்கக்குறி | GRS |
தலைவர் | அஜி நூர் |
செயலாளர் நாயகம் | மசிடி மஞ்சுன் |
நிறுவனர் | அஜி நூர்[1] |
துணைத் தலைவர் | மாக்சிமஸ் ஓங்கிலி ஜெப்ரி கித்திங்கான் யோங் டெக் லீ பண்டிகர் அமின் முலியா |
குறிக்கோளுரை | சபாவை நேசிப்போம் "Sayangi Sabah" |
தொடக்கம் | 12 செப்டம்பர் 2020 (2020-09-12)[2] |
சட்ட அனுமதி | 11 மார்ச் 2022[1] |
பிரிவு | பெரிக்காத்தான் நேசனல் (PN) பாரிசான் நேசனல் (BN) பெர்சத்து (BERSATU) |
முன்னர் | சபா ஐக்கிய கூட்டணி (GBS)[3] |
தலைமையகம் | Lot 57 G7 Plaza Permai 2 Alamesra 88400 Kota Kinabalu Sabah |
கொள்கை |
|
அரசியல் நிலைப்பாடு | வலது சாரி |
தேசியக் கூட்டணி | கூட்டணிகள்:
|
நிறங்கள் | நீலம்[4] |
மேலவை | 2 / 70
|
மக்களவை | 6 / 26
|
சபா சட்டமன்றம் | 29 / 79
|
மலேசியாவின் முதலமைச்சர்கள் | 1 / 13
|
தேர்தல் சின்னம் | |
![]() | |
கட்சிக்கொடி | |
![]() | |
சபா மக்கள் கூட்டணி (GRS), 2022-இல் சங்கங்கள் சட்டம் 1966-இன் கீழ், சபா உள்ளூர் அரசியல் கூட்டணியில் இரண்டாவது கூட்டணியாகப் பதிவு செய்யப்பட்டது. (பசோக்-பிபிஎஸ் கூட்டணிக்குப் பிறகு, சபாவில் பதிவு செய்யப்பட்ட முதல் கூட்டணி; 1985-இல் நிறுவப்பட்டது; 1994-இல் கலைக்கப்பட்டது.)[1][5] |
மூடு
தேசிய ஆளும் கூட்டணியான பாரிசான் நேசனல்; சமூக ஜனநாயக நல்லிணக்கக் கட்சி (Social Democratic Harmony Party); மற்றும் மாநில சட்டமன்றத்தில் ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவுடன்; 2020 மாநிலத் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மையைப் பெற்ற பின்னர், தற்போது சபா மக்கள் கூட்டணி (GRS), சபாவின் ஆளும் கட்சியாக உள்ளது.[8]