நாரா சந்திரபாபு நாயுடு (தெலுங்கு: నారా చంద్రబాబు నాయుడు, பி. ஏப்ரல் 20, 1950), ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சரும் ஆவார்.[2][3] 1995 முதல் 2004 வரையும்,2014 முதல் 2019 வரையும் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார்.[4] தற்போது தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராக உள்ளார். ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ் என்ற உணவு நிறுவனத்தை 1992 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். 2014 இல் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கானாவை தவிர்த்து, ஆந்திரப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் பெரும் வெற்றி பெற்றார். புதியதாக அமைக்கப்பட்ட சீமாந்திரா மாநிலத்தின் முதன்முதலில் முதல்வராகப் பதவியேற்றார்.
நாரா சந்திரபாபு நாயுடு | |
---|---|
13வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 சூன் 2024 | |
ஆளுநர் | எசு. அப்துல் நசீர் |
முன்னையவர் | ஜெகன் மோகன் ரெட்டி |
பதவியில் 8 சூன் 2014 – 23 மே 2019 | |
ஆளுநர் | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் |
முன்னையவர் | நல்லாரி கிரண் குமார் ரெட்டி (முன்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பின்னவர் | ஜெகன் மோகன் ரெட்டி |
பதவியில் 1 செப்டம்பர் 1995 – 13 மே 2004 | |
ஆளுநர் | கிருஷண் காந்த் கோபால ராமனுஜம் சக்ரவர்த்தி ரங்கராஜன் சுர்சித் சிங் பர்னாலா |
முன்னையவர் | என். டி. ராமராவ் |
பின்னவர் | எ. சா. ராஜசேகர் |
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1989 | |
முன்னையவர் | என். ரங்கசாமி நாயுடு |
தொகுதி | குப்பம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 ஏப்ரல் 1950 நாராவரிப்பள்ளி, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி (1983-தற்போது வரை) இந்திய தேசிய காங்கிரசு (1983-வரை) |
துணைவர் | நாரா புவனேசுவரி |
பிள்ளைகள் | நாரா லோகேஷ் (மகன்) |
உறவினர் | என். டி. ராமராவ் (மாமனார்) நந்தமூரி பாலகிருஷ்ணா புரந்தேசுவரி ஜூனியர் என்டிஆர் நந்தமூரி கல்யாண் ராம் தாரகா இரத்னா நாரா ரோகித் |
வாழிடம்(s) | ஜுபிலீ மலைகள், ஐதராபாத், இந்தியா |
முன்னாள் கல்லூரி | சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம்[1] |
இணையத்தளம் | Government Site Official Site |
இவர் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் ஆகியோர் இவரை ஐதராபாத்தில் சந்தித்துள்ளனர். இந்தியா டுடே,தி எகனாமிக் டைம்ஸ்,டைம் (இதழ்) போன்ற இதழ்களின் ஆண்டுச் சிறப்பு விருதுகளையும் உலக பொருளாதார மன்றத்தின் கனவு அமைச்சரவையின் அங்கத்துவத்தையும் வென்றுள்ளார்.[5][6][7][8] தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தேசிய தகவல்தொழிற்நுட்பக் குழுவின் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.[9][10]
இளமையும் கல்வியும்
சந்திரபாபு ஏப்ரல் 20, 1950இல் ஆந்திரப் பிரதேசத்தின், சித்தூர் மாவட்டத்தின் நாரவாரிபள்ளி கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் கர்ஜூரா நாயுடு மற்றும் அம்மனம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கக் கல்வியை சேசாபுரத்திலும் ஒன்பதாவது வகுப்பு வரை சந்திரகிரி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.[11] பின்னர் திருப்பதியில் மேல்நிலைப் பள்ளிப்படிப்பு முதல் முதுகலைப் பட்டம் வரைப் படித்தார். 1972இல் இளங்கலை பட்டத்தையும், 1974இல் பொருளியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். மேலும் பொருளியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும்போது அரசியலில் ஈடுபட்டதால் தமது கல்விப் பயணத்தை முடித்துக் கொண்டார்.[11][12][13]
ஆட்சி
1984ம் ஆண்டு தனது இதய அறுவைச் சிகிச்சைக்காக என். டி. ராமராவ் அமெரிக்கா சென்ற போது அவரின் கட்சியைச்சேர்ந்த பாஸ்கர் ராவ் அரசியல் சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது கட்சிக்குள் கொந்தளிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து வந்து கருப்பு உடையணிந்து நீதிகேட்டு தர்ம யுத்தம் செய்தார் என்.டி.ஆர். அந்த மாதமே கவர்னரின் உதவியால் மீண்டும் ஆட்சி என்.டி.ஆர், கையில் வந்தது. அதன் பின் என்.டி.ஆரின் மருமகனான இவர் முதல்வராக பதவியேற்றார். மீண்டும் 2014 ஆம் ஆண்டின் சூன் இரண்டாம் நாளில் ஆந்திரா இரண்டாக பிரிந்து தெலுங்கானா, சீமாந்திரா என பிரிந்த போது, 175 தொகுதிகளில் 102 தொகுதிகளை வென்று சீமாந்திராவின் முதல்வராக பதவியேற்றார்.[14]
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 175 சட்டமன்ற தொகுதிகளில், 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை பறிகொடுத்தார்.[15]
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.