சண்டிகர்

பஞ்சாப், அரியானா மாநிலங்களின் தலைநகரம் மற்றும் ஒன்றியப்பகுதி From Wikipedia, the free encyclopedia

சண்டிகர்map

சண்டிகர், இந்தியாவில் உள்ள ஒரு ஒன்றியப் பகுதி மற்றும் நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பகுதியாக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சண்டிகர், நாடு ...
சண்டிகர்
Thumb
திறந்த கை நடுகல்
ஆள்கூறுகள்: 30°45′N 76°47′E
நாடு இந்தியா
பகுதிவட இந்தியா
நிறுவப்பட்ட நாள்††1 நவம்பர் 1966
அரசு
  ஆட்சிப் பொறுப்பாளர்பன்வாரிலால் புரோகித்
பரப்பளவு
  ஒன்றியப் பகுதி114 km2 (44 sq mi)
  பரப்பளவு தரவரிசை35
ஏற்றம்
321 m (1,053 ft)
மக்கள்தொகை
 (2011)[1][2]
  ஒன்றியப் பகுதி10,55,450
  தரவரிசை31
  அடர்த்தி9,262/km2 (23,988/sq mi)
  பெருநகர்10,25,682 (IN: 51st)
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்[4]
160 xxx
தொலைபேசி குறியீடு[4]+91—0172
ஐஎசுஓ 3166 குறியீடுIN-CH
வாகனப் பதிவுCH-01
CH-02
CH-03
CH-04
இணையதளம்chandigarh.gov.in
The city of Chandigarh comprises all of the union territory's area.
††Under Section 4 of the Punjab Reorganisation Act, 1966.
மூடு

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சண்டிகரின் மொத்த மக்கள் தொகை 1,055,450 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 2.75% மக்களும், நகரப்புறங்களில் 97.25% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.19% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 580,663 ஆண்களும் மற்றும் 474,787 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 818 வீதம் உள்ளனர். 114 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சண்டிகரில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 9,258 மக்கள் வாழ்கின்றனர். சண்டிகரின் சராசரி படிப்பறிவு 86.05 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.99 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 81.19 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 119,434 ஆக உள்ளது. [5]

சமயம்

சண்டிகரில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 852,574 (80.78 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 51,447 (4.87 %) ஆகவும், ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 8,720 (0.83 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 138,329 (13.11 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 1,960 (0.19 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 1,160 (0.11 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 246 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,014 (0.10 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

சண்டிகரின் ஆட்சி மொழிகளான, ஆங்கிலம், பஞ்சாபி , இந்தி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.

போக்குவரத்து

தரைவழிப் போக்குவரத்து

1465 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 2 சண்டிகர் நகரத்தை புதுதில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களுடன் இணைக்கிறது. 323 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 21 சண்டிகர் நகரை இமாச்சலப் பிரதேசத்தின் மலைவாழிட நகரான மணாலியை, சிம்லா வழியாக இணைக்கிறது. 225 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 95 பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் நகரத்துடன் இணைக்கிறது.

தொடருந்து

சண்டிகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து புதுதில்லி, சென்னை, மதுரை , கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, சிம்லா, அமிர்தசரஸ், ஜம்மு போன்ற அனைத்து முக்கிய நகரங்களை சண்டிகர் நகரத்துடன் இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது. [6]

வானூர்தி நிலையம்

சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடனும், பன்னாட்டு நகரங்களுடனும் வானூர்திகள் மூலம் வான் வழியாக இணைக்கிறது. [7]

சுற்றுலா

சண்டிகர் நகரத்தில்

பாறைச் சிற்பத் தோட்டம், சாகீர் உசேன் ரோசாத் தோட்டம் மற்றும் காந்தி பவன்

அருகில் உள்ள சுற்றுலா மையங்கள்

அமிர்தசரஸ், வாகா, வாகா எல்லைச் சடங்கு மற்றும் பிஞ்சூர் தோட்டம்

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.