கௌசானி
உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழிடம் From Wikipedia, the free encyclopedia
உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழிடம் From Wikipedia, the free encyclopedia
கௌசானி (Kausani) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் பாகேசுவர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழிடம் ஆகும். திரிசூல மலை, நந்தா தேவி, பஞ்சசூலி போன்ற இமயமலை சிகரங்களின் அழகிய சிறப்பம்சத்திற்கும் அதன் 300 கி.மீ அகலமுள்ள பரந்த காட்சிகளுக்கும் இக்கிராமம் பிரபலமானது. நிலப்பரப்புகளில் உள்ள ஒற்றுமை காரணமாக மகாத்மா காந்தி இந்த இடத்தை 'இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என்று அழைத்தார்.
கௌசானி
कौसानी | |
---|---|
Clockwise from top: கௌசானியில் சூரிய உதயம், கௌசானியிலிருந்து தெரியும் திரிசூல மலையும், பஞ்சசூலி மலைச் சிகரமும், அல்மோரா-கர்ணபிரயாகை சாலை, அனசக்தி ஆசிரமம், தேயிலைத் தோட்டங்கள். | |
ஆள்கூறுகள்: 29.84°N 79.60°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | பாகேசுவர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 5.2 km2 (2.0 sq mi) |
ஏற்றம் | 1,890 m (6,200 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,408 |
• அடர்த்தி | 460/km2 (1,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி சமசுகிருதம் |
• பேசும் மொழி | குமவுனி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | |
தொலைபேசி இணைப்பு எண் | 059628 |
வாகனப் பதிவு | உகே |
இணையதளம் | uk |
1947ஆம் ஆண்டில் இந்தியச் சுதந்திரத்தின் போது, அல்மோரா மாவட்டத்திலிருந்த] கௌசானி,[5] 1997 செப்டம்பர் 15 க்குப் பிறகு பாகேசுவர் மாவட்டத்தில் இணைந்தது. 2000 நவம்பர் 9 அன்று, உத்தராகண்டம் மாநிலம் இமயமலை மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டங்களிலிருந்து உருவாக்கப்பட்டது.[6]
கௌசானி 29.8541 ° வடக்கிலும் 79.5966 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[7] பாகேசுவர்நகரத்திலிருந்து 40 கி.மீ (25 மைல்) தொலைவிலும்,[8] குமாவுன் இராச்சியத்தின் தலைநகராக இருந்த, பெரிய மலை வாழிடமான அல்மோராவிற்கு வடக்கே 52 கிமீ (32 மைல்) தொலைவிலும். அமைந்துள்ளது.
இங்குள்ள 'அனசக்தி ஆசிரமம்' அமைதியான மற்றும் மதிப்பிற்குரிய இடமாகும். இங்கு மகாத்மா காந்தி சில நாட்கள் கழித்தார். மேலும், அனசக்தி யோகம் குறித்தும் தனது வர்ணனையை எழுதினார்.[9] இங்கு தங்குவதற்கு பல விடுதிகள் இருக்கின்றன. அவை மலைகளின் பரந்த காட்சிகளை வழங்குகிறது.
இலட்சுமி ஆசிரமம் இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இது குமாவுனி பெண்கள் நடத்தும் ஒரு மையமாகும். இது சமூக சேவை மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காந்திஜியின் சீடரான சர்ளா பென் (கேத்தரின் ஹெய்ல்மேன்) 1946இல் ஆசிரமத்தை நிறுவினார்.[10][11] மேலும் தனது வாழ்க்கையை இங்கு சமூக சேவையில் கழித்தார். மேலும் அனசக்தி ஆசிரமத்தையும் நிறுவினார். இலட்சுமி ஆசிரமம் அடர்த்தியான பைன் காடுகளுக்கு இடையே ஒரு தனி பகுதியில் அமைந்துள்ளது.
இங்குள்ள பிற ஆர்வமுள்ள இடங்களாக தேயிலைத் தோட்டங்கள் (பாகேசுவர் சாலையிலிருந்து 5 கி.மீ),[12] பைஜ்நாத்கோயில்களின் குழு (பாகேசுவர் சாலையில் 16 கி.மீ) [13] இருக்கிறது. உள்ளூர் நெசவாளர்களால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட உயர்தர கம்பளி சால்வைகளின் அற்புதமான தொகுப்பு குமாவுன் சால் எம்போரியத்தில் கிடைக்கும்.[14]
இங்குள்ள பந்த் அருங்காட்சியகம் இந்த ஊரில் பிறந்த பிரபல இந்திக் கவிஞர் சுமித்ரானந்தன் பந்த் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.[15] அருங்காட்சியகத்தில் அவரது அன்றாட பயன்பாட்டின் கட்டுரைகள், அவரது கவிதைகளின் வரைவுகள், கடிதங்கள், அவரது விருதுகள் போன்றவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் கௌசானி பேருந்து முனையத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ளது.
பந்த்நகரில் (178 கி.மீ) அமைந்துள்ள பந்த்நகர் விமான நிலையம் முழு குமாவுன் பிராந்தியத்திற்கும் சேவை செய்யும் முதன்மை விமான நிலையமாகும். தில்லியில் (431 கி.மீ) அமைந்துள்ள இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள சர்வதேச விமான நிலையமாகும். கத்கோடம் இரயில் நிலையம் (145 கி.மீ) அருகிலுள்ள இரயில் நிலையம். கௌசானி உத்தராகண்டம் மாநிலம் மற்றும் வட இந்தியாவின் முக்கிய இடங்களுடன் செல்லக்கூடிய சாலைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அல்மோரா, பாகேசுவர், கரூர், சோமேசுவர் மற்றும் குமாவுன் பகுதியில் பிற முக்கிய இடங்களுக்கு பேருந்து சேவைகள் இருக்கிறது.
1942: எ லவ் ஸ்டோரி என்றத் திரைப்படம் இந்த பிராந்தியத்தில் படமாக்கப்பட்டது. மேலும், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவை படப்பிடிப்பு நோக்கத்திற்காக சித்தரிக்க இப்பகுதி பயன்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.