![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/14/Poultry_of_the_world.jpg/640px-Poultry_of_the_world.jpg&w=640&q=50)
கோழியின வளர்ப்புப் பறவைகள்
From Wikipedia, the free encyclopedia
கோழி வளர்ப்பு (Poultry) (/ˈpoʊltri//ˈpoʊltri/) என்பது கோழி, கோழியினப் பறவைகளை மனிதர்கள் முட்டை, இறைச்சி, இறகுகளுக்காக வளர்ப்பது சார்ந்த சொற்றொடராகும். இவ்வாறு வளர்க்கப்படும் பறவைகள் கேலோயன்சிரி வரிசையைச் சார்ந்த, அதிலும் குறிப்பாக, கல்லிபார்மஸ் வரிசையைச் சார்ந்தவையாகும். இதில் கோழி, காடை, துருக்கை இனப்பறவைகள் உள்ளடடங்கும் இது இறைச்சிக்காகக் கொல்லப்படும் புறாக்குஞ்சு போன்ற பிற பறவையினங்களையும் உள்ளடக்கும். ஆனாலும், இந்த இனங்களைச் சார்ந்த, விளயாட்டுக்கும் உணவுக்கும் வேட்டையாடிப் பெறும் கான்பறவைகளை இது உள்ளடக்குவதில்லை. சிறிய விலங்கு) எனப் பொருள்படும் புல்லுஸ் (pullus) எனும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து தோன்றிய பிரெஞ்சு மொழி ச் சொல்லான பெளல் (poule) என்பதிலிருந்தே ஆங்கிலச் சொல் பவுல் பெறப்பட்டது. பறவைகள் வீட்டின விலங்குகளாக வளர்க்கப்படுவது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது. மனிதர்கள் தாங்கள் காட்டுப் பகுதிகளில் கிடைத்த முட்டைகளை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதற்காகத் தங்களது வீட்டில் கொண்டு வந்து வைத்ததன் விளைவாக இது தொடங்கியிருக்க வேண்டும். பிறகு, இது பறவைகளை மனிதன் சிறைப்பிடித்து வைத்துக்கொள்வதையும் சேர்த்துக் கொண்டது. வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகளைச் சேவல் சண்டையிடவும், பின்னர் குயில்களை அவற்றின் இசைக்காகவும் பழக்கப்படுத்தினர். விரைவிலேயே, பறவைகளைச் சிறையில் வைத்து வளர்ப்பது உணவுக்கான மூலமாக இருப்பது உணரப்பட்டது. வேகமான வளர்ச்சி, முட்டையிடும் திறன், இணக்கம், சிறகுகளின் தோற்றம், அமைதியான குணம் ஆகியவற்றிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் பல நூற்றாண்டுகளாக நடந்துவருகிறது. நவீன வளர்ப்பினங்கள் தங்கள் காட்டு மூதாதையர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டனவாக உள்ளன. சில பறவைகள் இன்னும் சிறு கூட்டங்களாக வளர்க்கப்படுகின்றன. இன்று சந்தையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான பறவை இனங்கள் வணிக நோக்கத்துடன் அமைந்துள்ள நிறுவனங்களில் வளர்க்கப்பட்டவையேயாகும். உலகளாவிய நிலையில் கோழி இறைச்சி, முதலாவதான பன்றி இறைச்சியோடு சேர்ந்து மிகப் பரவலாக சாப்பிடப்படும் இரண்டாவது இடத்தைப் பிடித்த , இறைச்சி வகையாகிறது. ;[1] முட்டையும் கோழி இறைச்சியும் உயர்தரப் புரதம் நிறைந்த, ஆனால் கொழுப்பு விகிதம் குறைந்த உணவாக அமைகிறது. அனைத்து கோழி இறைச்சி வகையும் ஒழுங்காக கையாளப்பட்டு, போதுமான அளவு சமைக்கப்படுவது, உணவு நஞ்சாகும் இடரைக் குறைக்கும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/14/Poultry_of_the_world.jpg/640px-Poultry_of_the_world.jpg)