![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/Terengganu_crystal_mosque.jpg/640px-Terengganu_crystal_mosque.jpg&w=640&q=50)
கோலா திராங்கானு
திராங்கானு மாநிலத்தின் தலைநகரம். / From Wikipedia, the free encyclopedia
கோலா திராங்கானு (மலாய்: Kuala Terengganu; ஆங்கிலம்: Kuala Terengganu; சீனம்: 登嘉楼; ஜாவி: ترڠݢانو) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரம்; அரசத் தலைநகரம்; மற்றும் கோலா திராங்கானு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.
கோலா திராங்கானு | |
---|---|
Bandaraya Kuala Terengganu City of Kuala Terengganu | |
![]() மாநிலத் தலைநகரம் அரச நகரம் | |
வலது மேற்புறம் இருந்து அபிடின் மசூதி, பளிங்கு மசூதி, கோலா திராங்கானு சைனாடவுன், டூயோங் தீவில் இருந்து கோலா திராங்கானு மசுதானா அரண்மனை | |
![]() | |
ஆள்கூறுகள்: 05°19′45″N 103°08′10″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கோலா திராங்கானு மாவட்டம் கோலா நெருசு மாவட்டம் |
நகராண்மை | 18 சனவரி 1979 |
மாநகரத் தகுதி | 1 சனவரி 2008 |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | கோலா திராங்கானு மாநகராட்சி |
• மேயர் | துவான் ரோசுலி லத்திப் 5 சூன் 2022 |
பரப்பளவு | |
• மொத்தம் | 605[1] km2 (233.59 sq mi) |
ஏற்றம் | 15 m (49 ft) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 3,75,424 [1] |
• அடர்த்தி | 557.94/km2 (1,445.07/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 20xxx |
தொலைபேசி | 09-6xxxxxxx |
வாகனப் பதிவெண்கள் | T |
இணையதளம் | mbkt |
இந்த நகரம், மாநிலத்தின் முதன்மைப் பொருளாதார மையமாகவும் விளங்குகிறது. கோலாலம்பூரில் இருந்து வடகிழக்கில் 440 கிலோமீட்டர் தொலைவில் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையோரம் அமைந்து உள்ளது. இந்த நகரம் திராங்கானு ஆற்றின் கழிமுகப் பகுதியில் தென் சீனக் கடலை நோக்கியபடி அமைந்து உள்ளது.
கோலா திராங்கானு மாவட்டம் பரப்பளவில் மிகச் சிறியது. ஆனால், நகரப் பகுதியை உள்ளடக்கிய கோலா நெருஸ் மாவட்டத்தையும் சேர்த்து அதிக மக்கள் தொகையைக் கொண்டது. 2010-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 406,317.[1][2] 2008 சனவரி 1-ஆம் தேதி கரையோர மரபுரிமை நகரம் எனும் பெயருடன் மாநகரத் தகுதி வழங்கப்பட்டது.