கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Kollam Junction railway station) இந்திய மாநிலமான கேரளத்தின் கொல்லம் நகரத்தில் அமைந்துள்ளது. பரப்பளவில் கேரளாவின் இரண்டாவது பெரிய ரயில் நிலையம் கொல்லம் இரயில் நிலையமாகும். மாநிலத்தின் மிகப் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட இரயில்வே நடைமேடை கொல்லம் இரயில் நிலையத்தில் அமைந்துள்ளது [2][3][4].
கொல்லம் சந்திப்பு | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | ||||||||||||
![]() மேலிருந்து: ரயில் நிலையத்தின் நுழைவாயில், நிலையத்தில் ஒரு மெமு ரயில், பிரதான நடைமேம்பாலம், நிலையத்தில் பெயர் பலகை, கொல்லம் மெமு ரயில் கொட்டகை கட்டிடம் | ||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||
வேறு பெயர்கள் | குயிலான் சந்திப்பு | |||||||||||
அமைவிடம் | கொல்லம், கொல்லம் மாவட்டம், கேரளம் இந்தியா | |||||||||||
ஆள்கூறுகள் | 8.8860°N 76.5951°E / 8.8860; 76.5951 | |||||||||||
ஏற்றம் | 6.74 மீட்டர்கள் (22.1 அடி) | |||||||||||
உரிமம் | இந்திய இரயில்வே | |||||||||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | |||||||||||
தடங்கள் | கொல்லம்-திருவனந்தபுரம் பாதை கொல்லம்–எர்ணாகுளம் (ஆலப்புழா வழியாக) மற்றும் (கோட்டயம் வழியாக) கொல்லம்–செங்கோட்டை பாதை (புனலூர் வழியாக) | |||||||||||
நடைமேடை | 6 (1A,1,2,3,4,5) | |||||||||||
இருப்புப் பாதைகள் | 17 | |||||||||||
இணைப்புக்கள் | ![]() ![]() | |||||||||||
கட்டமைப்பு | ||||||||||||
கட்டமைப்பு வகை | தரையில் நிலையம் | |||||||||||
நடைமேடை அளவுகள் | 01 | |||||||||||
தரிப்பிடம் | ![]() | |||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ![]() | |||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||
நிலை | செயல்படும் | |||||||||||
நிலையக் குறியீடு | QLN | |||||||||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | |||||||||||
கோட்டம்(கள்) | திருவனந்தபுரம் | |||||||||||
வகைப்பாடு | NSG-3 | |||||||||||
வரலாறு | ||||||||||||
திறக்கப்பட்டது | சூன் 1, 1904; 120 ஆண்டுகள் முன்னர் (1904-06-01) | |||||||||||
மின்சாரமயம் | 2001; 23 ஆண்டுகளுக்கு முன்னர் (2001) 25 kV AC 50 Hz | |||||||||||
முந்தைய பெயர்கள் | Quilon Junction railway station | |||||||||||
முக்கிய தேதிகள் | ||||||||||||
1902:- 1 Jun 1904:- 1 Jan 1918:- 6 Jan 1958:- 23 Nov 1975:- 2001:- 10 May 2010:- 1 Dec 2013:- 2 Mar 2019 | சரக்கு ரயில் சேவை தொடங்கியது மீட்டர் கேஜ் ரயில் பாதையுடன் கூடிய ரயில் நிலையம் திறக்கப்பட்டது குயிலான்-சாலை சேவை தொடங்கியது சந்திப்பு ரயில் நிலையமாக மாறியது எர்ணாகுளத்திற்கு அகல ரயில் சேவை தொடங்கியது பாதை மின்மயமாக்கல் முடிந்தது கொல்லம்–புனலூர் அகலப்பாதை பாதை திறக்கப்பட்டது கொல்லம் மெமு ஷெட் திறக்கப்பட்டது டெர்மினல்-2 திறக்கப்பட்டது | |||||||||||
பயணிகள் | ||||||||||||
பயணிகள் 2018–19 | 23,479 ஒரு நாளைக்கு[1] | |||||||||||
சேவைகள் | ||||||||||||
| ||||||||||||
|
கொல்லம் சந்திப்பு இரயில் நிலையம் கொல்லம்-திருவனந்தபுரம் வழித்தட வரிசையில் அமைந்துள்ளது. இது இந்திய ரயில்வேயின் தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படுகிறது மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட்த்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. கொல்லம் இரயில் நிலையத்தின் ஓராண்டு பயணிகள் அனுமதிச்சீட்டு விற்பனை வருவாய். 64.23 கோடி ஆகும். இது அமெரிக்க டாலர் $ 9.7 மில்லியனுக்கு சமமாகும். 23,048 பயணிகள் கொல்லம் இரயில் நிலையத்தின் வழியாக தினசரி பயணம் செய்கிறார்கள் [5] . பயணச் சீட்டு விற்பனை இட வசதியுடன் இரண்டு முனையங்களைக் கொண்ட கேரளாவின் சில இரயில் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.
கொல்லம் சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து தென்னிந்திய நகரங்களான சென்னை மற்றும் விசாகப்பட்டினத்திற்கு மூன்று விரைவு இரயில்கள் இங்கிருந்து புறப்படுகின்றன. விசாகப்பட்டினம்-கொல்லம் வாரந்திர விரைவு இரயில் [6], அனந்தபுரி விரைவு இரயில் [7] மற்றும் சென்னை எக்மோர்-கொல்லம் சந்திப்பு விரைவு இரயில் ஆகியவை அம்மூன்று இரயில்களாகும் [8].