கொரோனா தீநுண்மி (பரிவட்ட நச்சுயிரி) அல்லது கொரோனாவைரசு (Coronaviruse) பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு தீநுண்மி ஆகும். இவை பசுக்கள், பன்றிகளில் வயிற்றுப்போக்கையும், கோழிகளில் மேல் சுவாச நோயையும் உண்டாக்கும். இத்தீநுண்மிகள் மனிதர்களுக்கு சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இத்தொற்றுகள் பெரும்பாலும் மிதமானவையாக இருந்தாலும் அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானவையாக உள்ளன. இந்நோய்க்கான தடுப்பு அல்லது சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது தீநுண்மி தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை.

விரைவான உண்மைகள் கொரோனாவைரசு, தீநுண்ம வகைப்பாடு ...
கொரோனாவைரசு
Thumb
கொரோனாவைரசு முதிர்ந்த நச்சுயிரிகளின் மின்துகள் நுண்படம்
Thumb
தீநுண்ம வகைப்பாடு e
பொது
  • ஆல்பாகொரோனாவைரசு
  • பீட்டாகொரோனாவைரசு
  • டெல்டாகொரோனாவைரசு
  • காமாகொரோனாவைரசு
வேறு பெயர்கள் [1][2]
  • கொரோனாவைரினே
மூடு

கொரோனாவைரசுகள் நிடோவைரலசு வரிசையில், கொரோனவிரிடே குடும்பத்தில் ஆர்த்தோகொரோனவிரினே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.[3][4] இவை ஒரு நேர்மறை உணர்வு கொண்ட ஒற்றைத்-தனிமைப்படுத்தப்பட்ட ஆர்.என்.ஏ மரபணு மற்றும் திருகுசுருள் சமச்சீர்மை அதிநுண்ணுயிர் அமைப்பு (நியூக்ளியோகாப்சிட்) கொண்ட உறைசூழ் தீநுண்மிகள் ஆகும். இவற்றின் மரபணு அளவு சுமார் 26 முதல் 32 கிலோபேசுகள் வரை இருக்கும், இது ஆர். என். ஏ தீநுண்மி ஒன்றிற்கு மிகப்பெரியதாகும்.

"கொரோனாவைரசு" என்ற பெயர் இலத்தீன் corona, கிரேக்க κορώνη (கொரீனா, "மாலை, மாலை") என்பதிலிருந்து உருவானது, அதாவது கிரீடம் அல்லது ஒளிவட்டம் எனப் பொருள். இது இலத்திரன் நுண்ணோக்கி மூலம் முதிர்ந்த நச்சுயிரிகளின் (தீநுண்மிகளின் தொற்று வடிவம்) சிறப்பியல்புத் தோற்றத்தைக் குறிக்கிறது, இது பெரிய, குழிவான மேற்பரப்பு கணிப்புகளின் விளிம்பைக் கொண்டுள்ளது, இது ஒரு அரச கிரீடம் அல்லது சூரிய கொரோனாவை நினைவூட்டுகிறது.

அனைத்து கொரோனாவைரசுகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பிற்கு பங்களிக்கும் புரதங்கள் முள் (S), உறை (E), சவ்வு (M) மற்றும் நியூக்ளியோகாப்சிட் (N) ஆகும்.[5]

முள்தொற்றியின் (கரோனா வைரசின்) உள்கட்டமைப்பைக் கீழே உள்ள படம் காட்டுகின்றது:

Thumb
முள்தொற்றியின் (கரோனா வைரசின்) உள் கட்டமைப்பு








வரலாறு

பரிவட்ட நச்சுயிரி அல்லது கொரோனா வைரசு 1960களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கோழிகளில் தொற்று மூச்சுக்குழாய் அழற்சித் தீநுண்மி மற்றும் மனித நோயாளிகளின் நாசிக் குழிகளில் இருந்து பொதுவான சளியைக் கொண்ட இரண்டு தீநுண்மிகள் முதன்முதலாகக் கன்டுபிடிக்கப்பட்டவை ஆகும். இவை பின்னர் மனித கொரோனாவைரசு 229E (human coronavirus 229E), மனித கொரோனாவைரசு OC43 என பெயரிடப்பட்டன.[6] இந்த நச்சுயிரிக் குடும்பத்தின் பிற தீநுண்மிகள் 2003 இல் SARS-CoV, 2004 இல் HCoV NL63, 2005 இல் HKU1, 2012 இல் MERS-CoV, 2019 இல் 2019-nCoV உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன. இவைகளில் பெரும்பாலானவை கடுமையான சுவாசக்குழாய் தொற்றுநோய்களில் ஈடுபட்டவை ஆகும்.

கோவிட்-19

கோவிட்-19, இது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனாவைரசு மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய கொடிய தாக்கத்திற்குப் பின்பு தான் இந்த பெயர் வைக்கப்பட்டது.[7]

2019–20 தொற்று

31 திசம்பர் 2019 அன்று, உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2019-nCoV என்ற கொரோனாவைரசின் ஒரு புதிய திரிபு சீனாவின் ஊகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[8] 2020 சனவரி 24 இற்குள் 25 இறப்புகள் பதிவாகின, 547 பேர் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.[9][10] ஊகான் தீநுண்மம் 2பி குழுவின் SARS-CoV தீநுண்மியுடன் கிட்டத்தட்ட 70% மரபணு ஒற்றுமையுடன் பீட்டாகொரோனா தீநுண்மியின் புதிய திரிபு என அடையாளம் காணப்பட்டுள்ளது.[11] இந்த தீநுண்மிகள் பாம்புகளில் இருந்து தோன்றியதாக சந்தேகிக்கப்பட்டது,[12] ஆனால் பல முன்னணி ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு உடன்படவில்லை.[13]

கொரோனாவைரசு காற்று வழியாகப் பரவுவதை விட, மூச்சுவிடும் துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவுவதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. [14]

கொரோனாவைரசு பாதிக்கப்பட்டவரிடம் இருந்து தான் இது பரவுகிறது. கோவிடு -19 இருக்கும் நபர் இருமும்போதோ அல்லது மூச்சுவிடும்போதோ, மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் சிறிய நுண்துளிகள் மூலம் மற்றொரு நபருக்குப் பரவுகிறது. சில சமயம் இந்த துளிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் இருக்கும் பொருளிலோ அல்லது நிலத்திலோ விழுந்து விடும். நோய் பாதிப்பு இல்லாத நபர் இந்த துளிகள் இருக்கும் பொருளையோ இடங்களையோ கையால் தொட்டு விட்டு பின்பு அவரது கண், மூக்கு, வாய் என இவற்றில் ஏதாவது உறுப்பைத் தொடும் போது நோய் அவருக்கும் பரவி விடுகிறது. அந்த துளிகளை மூச்சு மூலம் உள்ளிழுத்தாலும் நோய் பரவி விடும் என்றும் உலக சுகாதார அமைப்பு தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிவித்திருந்தது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.