கொன்றுண்ணிப் பறவை
From Wikipedia, the free encyclopedia
கொன்றுண்ணிப் பறவை அல்லது ஊனுண்ணிப் பறவை (birds of prey அல்லது raptors) என்பது எலி, முயல் போன்ற பாலூட்டி வகை விலங்குகளையும், கோழி, புறா போன்ற பிற பறவைகளையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான கழுகு, வல்லூறு, ஆந்தை போன்ற பறவைகள் அடங்கும். பெரும்பாலான ஊனுண்ணிப் பறவைகளில், பெண்பறவைகள் ஆண் பறவையிலும் அளவில் பெரியவை. இவற்றின் ஊணுண்ணும் இயல்பினால், இவை அழிந்துபோகாமல் காப்பதில் தனித்துவமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் கொன்றுண்ணிப் பறவை, உயிரியல் வகைப்பாடு ...
கொன்றுண்ணிப் பறவை | |
---|---|
பொன்னாங் கழுகு (Aquila chrysaetos) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
குடும்பம்: | Several, see text |
மூடு