கே. ஜி. ஜெயன் (K. G. Jayan, 21 நவம்பர் 1934 – 16 ஏப்பிரல் 2024) கேரளத்தைச் சேர்ந்த இந்தியக் கர்நாடக பாடகரும் இசைக்கலைஞரும் இசை இயக்குநருமாவார்.[1] தனது பக்திப் பாடல்களுக்கு பெயர் பெற்ற ஜெயன், தமிழ் மற்றும் மலையாளப் படங்களுக்கு 1,000 இற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தார்.[2] 2019 இல் இவருக்கு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[3][4]

விரைவான உண்மைகள் கே. ஜி. ஜெயன்K. G. Jayan, பின்னணித் தகவல்கள் ...
கே. ஜி. ஜெயன்
K. G. Jayan
Thumb
கே. ஜி. ஜெயனும் இவரது சகோதரர் கே. ஜி. விஜயனும்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1934-11-21)21 நவம்பர் 1934
கோட்டயம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 ஏப்ரல் 2024(2024-04-16) (அகவை 89)
திருப்பூணித்துறை, கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1943–2024
வெளியீட்டு நிறுவனங்கள்எச்எம்வி
மூடு

ஆரம்பகால வாழ்க்கை

ஜெயனும் இவரது இரட்டைச் சகோதரரான கே. ஜி. விஜயன், இவருடன் இணைந்து புகழ்பெற்ற ஜெயா-விஜயா குழுவை உருவாக்கினர். மறைந்த கோபாலன் தந்திரிகல், மறைந்த நாராயணி அம்மா ஆகியோரின் மூன்றாவதும் நான்காவதும் மகன்களாக 1934 நவம்பர் 21 அன்று கோட்டயத்தில் உள்ள தங்கள் வீட்டில் பிறந்தனர். இவர்கள் மிகச் சிறிய வயதிலேயே கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். ஒன்பது வயதில் குமாரநல்லூர் தேவி கோவிலில் தங்கள் அரங்கேற்றத்தை நடத்தினர். இவர்களின் முதல் குரு இராமன் பாகவதர், பின்னர் இவர்கள் மாவேலிக்கரை இராதாகிருஷ்ண ஐயரிடமிருந்து கற்றுக்கொண்டனர். இவர்கள் பள்ளிப்படிப்புக்குப் பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சுவாதி திருநாள் இசைக் கல்லூரி கணபூஷணம் பயின்று, தனித்துவத்துடன் தேர்ச்சி பெற்றனர். பின்னர், இவர்கள் ஆலத்தூர் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், எம். பாலமுரளிகிருஷ்ணா போன்ற கர்நாடக வித்வான்களிடமிருந்து மேம்பட்ட பயிற்சியைப் பெற்றனர். செம்பை வைத்தியநாத பாகவதரிடமிருந்து இவர்கள் பாடும் போதுதான் பாடல்களை இயற்றவும் பாடவும் தொடங்கினர்.

தனிப்பட்ட வாழ்க்கை

நடிகர் மனோஜ் கே. ஜெயன் இவரது இளைய மகன் ஆவார். கே. ஜி. ஜெயன் தனது 89-ஆவது வயதில், 2024 ஏப்ரல் 16 அன்று, திருப்பூணித்துறையிலுள்ள தனது இல்லத்தில் காலமானார்.[5][6][7]

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.