கேத்தரின் ஈசாவு (Katherine Esau, ஏப்ரல் 3, 1898 – ஜூன் 4, 1997): ஜெர்மானிய-அமெரிக்கத் தாவரவியலாளர் ஆவார். தாவர உடலமைப்பியல் குறித்த இவரது ஆய்வுக்காக தேசிய அறிவியல் பதக்கம் பெற்றார்.[1]
கேத்தரின் ஈசாவு | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 3, 1898 உக்ரைன், உருசியப் பேரரசு |
இறப்பு | 4 சூன் 1997 99) சாந்தா பார்பரா, கலிபோர்னியா | (அகவை
தேசியம் | ஜெர்மன், அமெரிக்கர் |
துறை | தாவரவியல் |
விருதுகள் | அறிவியலுக்கான தேசியப் பதக்கம் (1989) |
இளமையும் கல்வியும்
ஈசாவு 1898 இல் அன்றையஉருசியப் பேரரசின் ஏகதெரினோஸ்லாவ் (தற்பொழுது உக்ரைனில் திநிப்ரோ) என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் ரஷியன் மென்னோடைட்ஸ் என அழைக்க்ப்படும் ஜெர்மானியக் கிறித்துவக் குடும்பத்தைச் சேர்ந்தது.[2] ஈசாவு மாஸ்கோவில் தனது வேளாண்மைக் கல்வியைத் தொடங்கினார்.ஆனால் அக்டோபர் புரட்சி புரட்சி காரணமாக இவரது குடும்பம் ஜெர்மனிக்குக் குடிபெயர நேரிட்டது. அங்கு பெர்லின் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்தார்.[1] 1992-இல் ஈசாவின் குடும்பம் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்தது. அங்கு ஸ்பெர்க்லஸ் சர்க்கரை நிறுவனத்தில் பணியில் சேர்ந்த ஈசாவு, சர்க்கரை வள்ளிக்கிழங்கினைத் தாக்கும் சுருள் வைரஸ்களைத் தடுக்கும் ஆய்வில் ஈடுபட்டார்.[3] டேவிசில் உள்ள கலிபோர்னியப் பல்கலைக் கழகத்தில் தனது படிப்பினைத் தொடர்ந்த ஈசாவு, அங்கேயே தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை 1931 இல் முடித்துப் பட்டம் பெற்றார். பின்னர் அதே பல்கலைக்கழகத்திலேயே ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கு தனது 67 ஆம் வயதில் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.[3]
பணிகள்
ஈசாவு, தாவர உடலமைப்பியல் முன்னோடியாகத் திகழ்ந்தார். இவரது நூல்களான தாவர உடலமைப்பியல் மற்றும் விதைத் தாவரங்களின் உடலமைப்பியல் ஆகியன தாவரங்களின் கட்டமைப்பற்றி விளக்கும் முக்கியமான உயிரியல் நூல்களாகும். தொடக்கத்தில் இவரது ஆய்வு தாவரங்களைத் தாக்கும் தாவர தீ நுண்மம் பற்றியதாக இருந்தது. குறிப்பாக தாவரத் திசுக்களில் அதன் வளர்ச்சி பற்றியதாக இருந்தது. ஈசாவு ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, பின்னர் தாவரவியல் பேராசிரியராக உயர்ந்தார். கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டே தாவரங்களில் குறிப்பாக, உரியத்தின் மீதான தீ நுண்மத் தாக்குதல் பற்றிய ஆய்வைத் தொடர்ந்தர். உரியம் என்பது தாவரங்களில் உணவு சேமிக்கும் திசுக்களாகும். இவருடைய ஆய்வின் பயனாக உரியம் என்ற நூல் 1969 இல் வெளியிடப்பட்டது. இதில் ஐந்தாவது தொகுதி இவரது தொகுப்பின் மிக முக்கியமானதாக அங்கீகாரம் பெற்றது. அத்தொகுதி உரியம் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு முக்கியச் சான்றாக இருக்கிறது.[4]
ஈசாவு, கலை மற்றும் அறிவியலுக்கான தேசிய அகாதமியின் உறுப்பினராக 1949 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 1950 இல் இவர் வெர்ணான் சீடெல் என்பவருடன் இணைந்து உரியம் பற்றிய மேலும் பல ஆய்வுகளைச் செய்தார். 1957-இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேத்தரின் ஈசாவு, அந்த அகாதமியால் தேர்ந்தெடுக்கபப்ட்ட ஆறாவது பெண் உறுப்பினராவார். பின்னர், 1963-இல் கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் முழுநேரப் பேராசிரியராக பணி உயர்த்தப்பட்டார்.[6] டாவிஸில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு 1965 இல் சாந்தா பார்பராவில் உள்ள கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அங்கு தனது தொண்ணூறாம் வயது வரை ஆய்வுகளில் ஈடுபட்டார். ஈசாவு 162 ஆய்வுக் கட்டுரைகளையும், ஐந்து புத்தகத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.[7]
1973 இல், ஒரு பேட்டியில் வாசர்மேன் என்பவர் இவரது வழ்க்கையில் கல்வி மற்றும் தொழில் செலுத்தும் ஆதிக்கம் பற்றிய ஒரு கேள்விக்கு இவ்வாறு எழுதுகிறார்.
”நிறுவப்பட்ட கொள்கைகளுக்காக என்னை மாற்றிக்கொள்ளும் போது ஓர் ஆன்மீகச் சுதந்திரத்தைப் பராமரிப்பதற்கான ஒரு வழியை நான் கண்டறிந்தேன்..... நான் பெண் என்பதனால் எனது பணி பாதிக்கப்படுவதாக நான் என்றுமே உணரவில்லை”."[3]
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.