கெடா
மலேசிய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
கெடா (மலாய்: Kedah Darul Aman; ஆங்கிலம்: Kedah; சீனம்: 吉打) ஜாவி: قدح دار الامن; அரபு: قلحبر; தாய்லாந்து மொழி: ไทรบุรี; என்பது மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒரு மாநிலம் ஆகும். மலேசியத் தீபகற்கத்தின் வடக்கே அமைந்து உள்ளது.[2] வரலாற்று அடிப்படையில் கேடா (Queda) என்று அழைக்கப் படுகிறது. கெடா மாநிலத்தின் தலைநகரம் அலோர் ஸ்டார்.
கெடா Kedah | |
---|---|
கெடா டாருல் அமான் Kedah Darul Aman | |
பண்: அரசருக்கு இறைவன் அருள் புரிவானாக Allah Selamatkan Sultan Mahkota English: God Save the Crowned Sultan | |
கெடா in மலேசியா | |
ஆள்கூறுகள்: 6°07′42″N 100°21′46″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
தலைநகரம் | அலோர் ஸ்டார் |
அரச நகரம் | அனாக் புக்கிட் |
அரசு | |
• கெடா சுல்தான் | சுல்தான் சலாவுடீன் (Sultan Sallehuddin ibni Almarhum Sultan Badlishah ) |
• மந்திரி பெசார் | முகமட் சனுசி முகமட் நோர் (பெரிக்காத்தான்-பாஸ்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 9,500 km2 (3,700 sq mi) |
உயர் புள்ளி (பிந்தாங் மலை) | 1,862 m (6,109 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 20,71,900 |
• அடர்த்தி | 199/km2 (520/sq mi) |
மனித வள வளர்ச்சிப் பட்டியல் | |
• HDI (2019) | 0.808 (மிக உயர்வு) (மலேசிய மாநிலங்கள்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 02xxx 05xxx to 09xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | 04 (கூலிம்) 08 (லங்காவி) |
ஐஎசுஓ 3166 குறியீடு | MY-02 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | K (கெடா மாநிலம்) KV (லங்காவி) |
கெடா சுல்தானகம் | 1136 |
இணையதளம் | http://www.kedah.gov.my |
கெடா மாநிலத்தின் அரச நகரம் அனாக் புக்கிட். மற்ற முக்கிய நகரங்கள்: சுங்கை பட்டாணி (மக்கள்தொகை அடிப்படையில் மிகப்பெரிய நகர்ப்புற பகுதி); மற்றும் கூலிம்; பாலிங்; புக்கிட் காயூ ஈத்தாம்; சாங்லூன்; லூனாஸ்; லங்காவி.
கடாரம் என்பது கெடா மாநிலத்தின் தமிழ்ப் பெயர். பழங்காலத்தில் இருந்து, கெடா நிலப்பகுதியைக் கடாரம் என்று தமிழர்கள் அழைத்து வருகிறார்கள். இருப்பினும் தற்போது மலேசிய ஊடகங்களிலும், மலேசியப் பள்ளிப்பாட நூல்களிலும் கெடா எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கடாரம் என்பது வரலாற்றுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]
இதற்கான (அரபு மொழி: قتح ; (Kataha; Kalahbar); (qataḥa) அல்லது அரபு மொழி: قلحبر ; (qalaḥbar); அரபு நாட்டு வணிகர்கள் அவ்வாறு அழைத்து இருக்கிறார்கள். கெடா நிலப்பகுதி சயாமியர்களின் ஆட்சியில் இருந்த போது, அவர்கள் சைபுரி; (தாய்லாந்து மொழி: ไทรบุรี) என்று அழைத்து இருக்கிறார்கள்.[4][5]