கூட்டரசு சாலை 5 (மலேசியா)
மலேசிய தீபகற்பத்தின் மேற்குக் கரைப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அம / From Wikipedia, the free encyclopedia
கூட்டரசு சாலை 5 அல்லது கூட்டரசு சாலை 5 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 5 அல்லது Federal Route 5; மலாய்: Laluan Persekutuan Malaysia 5 அல்லது Jalan Persekutuan 5) என்பது மலேசிய தீபகற்பத்தின் மேற்குக் கரைப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும். மிக முக்கியமான நெடுஞ்சாலை. மலேசியாவில் உருவாக்கப்பட்ட மிகப் பழைமையான சாலைகளில் ஒன்றாகும்.[3]
கூட்டரசு சாலை 5 | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 655.85 km (407.53 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1887[1] – present |
வரலாறு: | கட்டி முடிக்கப்பட்டது 1988[2] |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | ஜெலாப்பாங், ஈப்போ, பேராக் |
சாலைகள்
![]() | |
தெற்கு முடிவு: | சுகூடாய், ஜொகூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | ஈப்போ லூமுட் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
655.85 கிலோமீட்டர்கள் (408 mi) நீளம் கொண்ட இந்தக் கூட்டரசு நெடுஞ்சாலையானது, வடக்கில் பேராக் ஜெலாப்பாங் நகர்ப் பகுதியில் தொடங்கி தெற்கில் ஜொகூர், சுகூடாய் (Skudai) வரை செல்கிறது.[4]