![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/48/State_Flag_of_Iran_%25281924%2529.svg/langta-640px-State_Flag_of_Iran_%25281924%2529.svg.png&w=640&q=50)
குவாஜர் வம்சம்
ஈரானியப் பகுதிகளில் வசித்து வரும் ஒரு இன சமூகம் / From Wikipedia, the free encyclopedia
குவாஜர் வம்சம் (Qajar dynasty) (listenⓘ; பாரசீக மொழி: سلسله قاجار Selsele-ye Qājār; அசர்பைஜான்: قاجارلر Qacarlar) கிபி 1794 முதல் 1925 முடிய ஈரானை ஆண்ட சியா இசுலாமிய அரச மரபாகும்.[2]
பாரசீகத்தின் பரந்த பேரரசு دولت علیّه ایران Dolate Eliyye Iran | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1794–1925 | |||||||||||||||
நாட்டுப்பண்: முதல் ஈரானிய நாட்டுப்பண் | |||||||||||||||
![]() 19-ஆம் நூற்றாண்டில் குவாஜர் வம்சத்தின் கீழ் பாரசீகம் | |||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||
தலைநகரம் | தெகுரான் | ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம், அசர்பைஜானிய மொழி | ||||||||||||||
அரசாங்கம் |
| ||||||||||||||
ஷாகென்ஷா | |||||||||||||||
• 1794–1797 | முகமது கான் குவாஜர்(முதல்) | ||||||||||||||
• 1909–1925 | அகமது ஷா குவாஜர் (இறுதி) | ||||||||||||||
பிரதம அமைச்சர் | |||||||||||||||
• 1906 | மிர்சா நசுருல்லா கான்(முதல்) | ||||||||||||||
• 1923–1925 | ரேசா ஷா பகலவி வம்சம்(இறுதி) | ||||||||||||||
வரலாறு | |||||||||||||||
• குவாஜர் வம்சம் | 1794 | ||||||||||||||
• குலிஸ்தான் உடன்படிக்கை | 24 அக்டோபர் 1813 | ||||||||||||||
• துருக்மென்சாய் உடன்படிக்கை | 10 அக்டோபர் 1828 | ||||||||||||||
• பாரிஸ் உடன்படிக்கை, 1857 | 4 மார்ச் 1857 | ||||||||||||||
• அக்கல் உடன்படிக்கை | 21 செப்டம்பர் 1881 | ||||||||||||||
• பாரசீக அரசமைப்பு புரட்சி | 5 ஆகஸ்டு 1906 | ||||||||||||||
• பகலவி வம்சம் | 1925 | ||||||||||||||
நாணயம் | ஈரானிய கிரான்[1] | ||||||||||||||
| |||||||||||||||
தற்போதைய பகுதிகள் |
துருக்கிய வழித்தோன்றல்களான பழங்குடி இன [3][4][5][6][7][8] குவாஜர் வம்சத்தினர் ஆண்ட நிலப்பரப்புகளை பாரசீகத்தின் பரந்த பேரரசு என்பர் (பாரசீக மொழி: دولت علیّه ایران Dowlat-e Aliyye Iran).
ஈரானை ஆண்ட சண்டு வம்சத்தின் இறுதி மன்னரான லோட்டப் அலி கானை பதவி நீக்கிய குவாஜர் வம்சத்தினர், 1794ல் ஈரானை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 1796-இல் குவாஜர் வம்சத்தின் முதல் மன்னர் முகமது கான் குவாஜர், வடகிழக்கு ஈரானின் மஷாத் நகரைக் கைப்பற்றி, [9] ஈரானின் அப்சரித்து வம்சத்தின் ஆட்சியை முடிவு கட்டினார்.[10]
குவாஜர் வம்சத்தினர் உருசியாவுடன் நடத்தியப் போரில் காக்கேசியா பகுதிகளான ஜார்ஜியா, அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா உள்ளிட்ட பல பகுதிகளை உருசியப் பேரரசிடம் இழந்தது. [11] [12]