குரூக் மக்கள் (Kurukh or Oraon or Dhangar)[7] திராவிடர்கள் ஆவார். இவர்கள் பேசும் குரூக் மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.[8] குரூக் மக்கள் இந்தியாவின் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அதிகம் வாழ்கின்றனர். இம்மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது. [9]

விரைவான உண்மைகள் குரூக்கர், மொத்த மக்கள்தொகை ...
குரூக் மக்கள்
குரூக்கர்
Thumb
பாரம்பரிய உடையில் பழங்குடி குரூக் மக்களின் நடனம்
மொத்த மக்கள்தொகை
அண்.3.8 மில்லியன் (2011)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியாஅண்.3,696,899[1]
   ஜார்கண்ட்1,716,618
   சத்தீஸ்கர்748,739
   மேற்கு வங்காளம்643,510
   ஒடிசா358,112
   பிகார்144,472
   அசாம்73,437
   திரிபுரா12,011[2]
 வங்காளதேசம்50,000[3]
 நேபாளம்37,424[4]
 பூட்டான்4200[5]
மொழி(கள்)
குரூக் மொழி  இந்தி  சத்திரி மொழி  ஒடியா மொழிவங்காள மொழி
சமயங்கள்
இந்து சமயம் (36%)[6]

சர்னா சமயம் (32%)  மற்றும் கிறித்தவம் (30%)  பிற சமயம் (1%)[6]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மூடு

இம்மக்களை மகாராட்டிரா மாநிலத்தில் ஒரோன் அல்லது தங்கட் அல்லது தங்கர் மக்கள் என அழைக்கின்றனர்.[10][11]

பாரம்பரியமாக காடுகளை நம்பி வாழ்ந்த ஓரோன் மக்கள் தற்போது வேளாண்மைத் தொழில் செய்கின்றனர். மேலும் அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் குடிபெயர்ந்து தேயிலைத் தோட்டங்களில் பணிசெய்கின்றனர்.மேலும் வங்காள தேசம், பிஜி தீவுகளில் குடியேறி தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கின்றனர்.[12][13]

சமயம்

குரூக் மக்கள் பின்பற்றும் பெரும்பான்மையான சமயங்கள் இந்து சமயம் 36%, கிறித்தவம் 30%, சர்னா சமயம் 32% மற்றும் பிற சமயங்களை 1% அளவில் பின்பற்றுகின்றனர்.

மொழி

குரூக் மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த குரூக் மொழியை பேசுகின்றனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.