குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட்
From Wikipedia, the free encyclopedia
குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட் (Queen's University Belfast) ஐக்கிய இராச்சியத்தின் வட அயர்லாந்தின் தலைநகர் பெல்பாஸ்ட்டில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக 1845 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1849 ஆம் ஆண்டு குயின்ஸ் கல்லூரி, பெல்பாஸ்ட் என்ற பெயரில் திறக்கப்பட்டது. ஆனாலும் இக்கல்லூரியின் வரலாறு 1810 ஆம் ஆண்டில் பெல்பாஸ்ட் ரோயல் அக்கடெமிக்கல் இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் இருந்து ஆரம்பிக்கிறது[2].
விரைவான உண்மைகள் உருவாக்கம், வேந்தர் ...
உருவாக்கம் | 1849 |
---|---|
வேந்தர் | ஜோர்ஜ் ஜே. மிட்ச்செல் |
துணை வேந்தர் | பேராசிரியர் பீட்டர் கிரெக்சன் |
நிருவாகப் பணியாளர் | 1,600 |
மாணவர்கள் | 24,560[1] |
பட்ட மாணவர்கள் | 19,165[1] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 5,395[1] |
அமைவிடம் | University Road , , , Belfast BT7 1NN 54°35′3″N 5°56′5″W |
இணையதளம் | http://www.qub.ac.uk |
மூடு
குயின்ஸ் பல்கலைக்கழகம் பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் அமைப்பு, ஐரோப்பிய பல்கலைக்கழக அமைப்பு, மற்றும் அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் பல்கலைக்கழகங்களின் அமைப்புகள் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. இது 300 இற்கும் மேற்பட்ட துறைகளில் பல்வேறு மட்டங்களிலும் பட்டப்படிப்பை வழங்கி வருகிறது[3].