![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2e/Jammu_and_Kashmir_Kupwara_district.svg/langta-640px-Jammu_and_Kashmir_Kupwara_district.svg.png&w=640&q=50)
குப்வாரா மாவட்டம்
சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
குப்வாரா மாவட்டம் (Kupwara District), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் அமைந்த வடக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் குப்வாரா நகரமாகும். இம்மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் ஆசாத் காஷ்மீரை எல்லையாக கொண்டுள்ளது. காஷ்மீர் சமவெளியில் வடமேற்கே, கடல் மட்டத்திலிருந்து 5300 அடி உயரத்தில் இமயமலையில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. மேலும் இம்மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை பாரமுல்லா மாவட்டம் சூழ்ந்துள்ளது. இம்மாவட்டம் அடர்ந்த காட்டுப் பகுதிகளைக் கொண்டது. இமயமலையில் உருவாகும் கிருஷ்ணகங்கா ஆறு இம்மாவட்டத்தின், கிழக்கு மேற்காக பாய்கிறது.
விரைவான உண்மைகள் குப்வாரா மாவட்டம், நாடு ...
குப்வாரா மாவட்டம் | |
---|---|
![]() இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் குப்வாரா மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (குப்வாரா): 34°31′12″N 74°15′00″E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
கோட்டம் | காஷ்மீர் கோட்டம் |
தலைமையிடம் | குப்வாரா |
அரசு | |
• சட்டமன்றத் தொகுதிகள | 5 : கர்னா, குப்வாரா, லோலாப், ஹந்த்வாரா, லாங் கோட் |
மக்கள்தொகை (2011) | |
• Total | 8,70,354 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | JK-09B |
இணையதளம் | http://kupwara.gov.in/ |
மூடு