![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9d/Gita_Press%252C_Gorakhpur.gif/640px-Gita_Press%252C_Gorakhpur.gif&w=640&q=50)
கீதா பிரஸ்
From Wikipedia, the free encyclopedia
கீதா பிரஸ் (Gita Press) என்பது இந்து சமய சாத்திரங்கள், காவியங்கள், தர்ம சாத்திரங்கள் அனைத்தும் முக்கிய உலக மொழிகளில் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிடும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பதிப்பக நிறுவனம் ஆகும்.[1] இந்து சமயத்தின் தத்துவங்கள், தர்ம சாத்திரங்கள் உலக மக்களுக்கு எடுத்துரைக்க, கீதா பிரஸ் பதிப்பக நிறுவனம் 29 ஏப்ரல் 1923 அன்று நிறுவப்பட்டது. இதன் நிறுவனர்கள் ஜெய தயாள் கோயங்கா, கன்ஷியாம் தாஸ் ஜலான் மற்றும் ஸ்ரீ அனுமன் பிரசாத் போதர் ஆவர். கீதா பிரசின் தலைமையகம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் நகரத்தில் செயல்படுகிறது. கீதா பிரஸ் இந்து சமயம் மற்றும் நீதி நூல்களை வெளியிடுவதுடன், மாத இதழ்களையும் பல மொழிகளில் வெளியிடுகிறது.[2] இதுவரை கீதா பிரஸ் 3,500 சமய சாத்திரங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளதுடன், பகவத் கீதை தொடர்பாக சிறிதும், பெரிதுமாக 100 விளக்க நூல்களை வெளியிட்டுள்ளது.[3]
Gita_Press_logo.png | |
துவங்கப்பட்டது | 29 ஏப்ரல் 1923 (101 ஆண்டுகள் முன்னர்) (1923-04-29) கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
துவங்கியவர் | ஜெய் தயாள் கோயங்கா, கன்ஷியாம் தாஸ் ஜலான், சிறீ அனுமன் பிரசாத் போதர் |
நாடு | இந்தியா |
தலைமையகம் | கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
பரவல் | உலகம் முழுவதும் |
வெளியிடும் வகைகள் | இந்து சமய நூல்கள் மற்றும் நல்வாழ்வுக்கான நூல்கள் |
தலைப்புகள் | சனாதன தர்மம் அல்லது இந்து சமயம் |
ஊழியர்களின் எண்ணிக்கை | 350 |
அதிகாரப்பூர்வ இணைத்தளம் |
|
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9d/Gita_Press%2C_Gorakhpur.gif/320px-Gita_Press%2C_Gorakhpur.gif)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c1/Gita_Press_Gorakhpur_outlet_at_Kanpur_Railway_Station.jpg/640px-Gita_Press_Gorakhpur_outlet_at_Kanpur_Railway_Station.jpg)
இந்திய அரசு 2021-ம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசு கீதா பிரஸ் நிறுவனத்திற்கு சூன் 2023ல் அறிவித்தது.