கிழக்கு மிட்னாபூர் மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் (Purba Medinipur district or East Midnapore district) (Pron: purbɔ med̪iːniːpur) (வங்காள மொழி: পূর্ব মেদিনীপুর জেলা), (Pron: ˌmɪd̪naˈpur) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். மேற்கு வங்காள மாநிலத்தின் மூன்று கோட்டங்களில் ஒன்றான வர்தமான் கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தம்லக் நகரம் ஆகும். நிர்வாக வசதிக்காக 1 சனவரி 2002-இல் மிட்னாப்பூர் மாவட்டத்தை, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மற்றும் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் என இரண்டாக இரண்டாக பிரிக்கும் போது கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் உருவானது. தம்லக் நகரம் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும்.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
கிழக்கு மிட்னாபூர்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | வர்தமான் கோட்டம் |
தலைமையகம் | தம்லக் |
பரப்பு | 4,736 km2 (1,829 sq mi) |
மக்கட்தொகை | 5,094,238 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,076/km2 (2,790/sq mi) |
படிப்பறிவு | 87.66 per cent |
பாலின விகிதம் | 936 |
வட்டங்கள் | 4 |
மக்களவைத்தொகுதிகள் | 4 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 16 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 2 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு