கிழக்கு அசர்பைசான் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கிழக்கு அசர்பைசான் (East Azerbaijan Province (பாரசீக மொழி: استان آذربایجان شرقی Āzarbāijān-e Sharqi; (அசர்பைஜானிشرقی آذربایجان اوستانی) என்பது ஈரானில் உள்ள முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணமானது ஈரானிய அசர்பைசனில் உள்ளது. இதன் எல்லைகளாக ஆர்மீனியா, அசர்பைஜான், அர்தாபில் மாகாணம், மேற்கு அசர்பைசன் மாகாணம், சஞ்சன் மாகாணம் போன்றவை உள்ளன. கிழக்கு அசர்பைசானின் தலைநகராக தப்ரீசு நகரம் உள்ளது. இந்த மாகாணமானது ஈரானின் மூன்றாவது வட்டாரத்தில் உள்ளது இதன் தலைமைச் செயலகமானது தலைநகரான தப்ரீசில் உள்ளது.[2]
கிழக்கு அசர்பைசான் மாகாணம்
East Azerbaijan Province استان آذربایجان شرقی | |
---|---|
கிழக்கு அசர்பைசான் மாவட்டங்கள் | |
ஆள்கூறுகள்: 38.0766°N 46.2800°E | |
நாடு | ஈரான் |
வட்டாரம் | வட்டாரம் 3 |
தலைநகரம் | தப்ரீசு |
Counties | 21 |
அரசு | |
• ஆளுநர் | மஜீத் கோதாபக்ஷ் |
• MPs of Parliament | East Azerbaijan Province parliamentary districts |
• MPs of Assembly of Experts | Mojtahed Shabestari, Pourmohammadi, Malakouti, Feyzi & Hashemzadeh |
• Representative of the Supreme Leader | seyed mohammad ali al hashem |
பரப்பளவு | |
• மொத்தம் | 45,650 km2 (17,630 sq mi) |
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)[1] | |
• மொத்தம் | 37,24,620 |
• அடர்த்தி | 82/km2 (210/sq mi) |
நேர வலயம் | ஒசநே+03:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+04:30 (IRST) |
மொழிகள் | பாரசீகம் (அலுவல்) உள்ளூர் மொழிகள்: அசர்பைஜான் |
இந்த மாகாணமானது சுமார் 47,830 கிமீ² பரப்பளவில், ஏறக்குறைய நான்கு மில்லியன் மக்கள் தொகையோடு உள்ளது. மாகாணத்தின் வடபகுதி எல்லையாக அசர்பைசன் குடியரசு, ஆர்மீனியா, அசர்பைஜானின் தன்னாட்சி நாக்ஷிவன் குடியரசு போன்றவையும், மேற்கில் மேற்கு அஜர்பைஜான், தெற்கில் ஜான்ஜான், கிழக்கில் அர்தாபி ஆகியவை உள்ளன. கிழக்கு அசர்பைசானானது ஈரானின் பிற பகுதிகளுடனும், அண்டை நாடுகளுடனும் சாலைகள் மற்றும் தொடர்வண்டிப் பாதை வலையமைப்பில் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு அசர்பைசானின் மிக உயர்ந்த நிலப்பகுதியானது தப்ரிசின் தெற்கே உள்ள சஹான்ட் மலையின் எரிமலை உச்சியாகும். இது 3,707 மீட்டர் (12,162 அடி) உயரமாகும். அதேசமயம் தாழ்நிலப் பகுதிகளானது கர்மாடுஸ் (அஹார்) அருகே உள்ளன. மாகாணத்தின் மலைக் குன்றுகளும் மலைத் தொடர்களும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன அவை: காரா டாக் மலைகள், சஹான்ட் மற்றும் போசாகோஷ் மலைகள், மற்றும் குஃப்லான் கொஹோ மலைகள் என்பனவாகும்.
கிழக்கு அசர்பைசானின் காலநிலை மத்திய தரைக்கடல் பெருநிலப்பகுதி கால நிலையால் பாதிக்கப்பட்டு குளிர் அரை வறண்ட காலநிலை நிலவுகிறது. காசுப்பியன் கடலில் இருந்து வரும் மென்மையான காற்றானது கடல் மட்டத்துக்கு அருகில் உள்ள தாழ் நிலப் பகுதிகளில் காலநிலையில் செல்வாக்கு செலுத்துகின்றது. தப்ரிசின் வெப்பநிலையானது 8.9 °C வரையும், மராக்கில் 20 °C வரையும் நிலவுகிறது. குளிர்காலத்தில் வெப்ப நிலையானது −10–−15 °C வரை குறைகிறது. வசந்த காலம் மற்றும் கோடை மாதங்கள் இந்த மாகாணத்தை பார்வையிட ஏற்ற பருவங்களாக உள்ளன.
கிழக்கு அசர்பைசான் ஈரானின் மிகப் பழமையான பிராந்தியங்களில் ஒன்றாகும். ஈரானில் அலெக்சாந்ரின் ஆட்சியின் போது (பொ.ச.மு. 331), அட்டோபபட் என அறியப்படும் ஒரு போர்வீரரின் தலைமையில் இப்பகுதியில் ஒரு கிளர்ச்சி நடந்தது தலைமை ஈடுபட்டார், அதன் பிறகு மீடியா நிலப்பகுதியானது, அட்டோபட்கன் என அழைக்கப்பட்டது. அப்போதிருந்து இந்தப் பகுதி ஆசாரபேதகன், ஆசார்பாகன், ஆஜர்பாயன் என அறியப்பட்டது.
தீர்க்கதரிசியான ஜொரோஸ்டரின் பிறப்பானது, கொன்சாக் நகரத்தின் அருகே உள்ள ஓரிமேயின் ஏரி (சிச்செஷ்ட்), அருகே நடந்தது என்று இஸ்லாமிய ஆய்வாளர்கள் பிரகடனம் செய்கின்றனர். இந்த மாகாணமானது பல்வேறான அரசியல் மற்றும் பொருளாதார உயர்வுக்கு உள்ளானதால், பல வெளிநாட்டினரை ஈர்த்துள்ளது. குறிப்பாக உருசியர்கள் கடந்த 300 ஆண்டுகள் நெடுக்க இந்த பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை செலுத்த முயற்சித்திருக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் இப்பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈரானின் அரசியலமைப்பு ஆதரவு இயக்கம் இங்கு தொடங்கியது.
தற்போதய கிழக்கு அசர்பைசனில் 1945 ஆம் ஆண்டில் பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியம் அசர்பைசன் மக்கள் அரசாங்கத்தை அமைக்க உதவியது.
1986 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் பன்னிரண்டு மாவட்டங்கள் இருந்தன. 1996ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு காலத்தில் இரண்டு கூடுதல் மாவட்டங்களாக மராண்டின் பகுதியிலிருந்து ஜோல்பா, மற்றும் பொனப் பகுதியில் இருந்து மாலக்கன் ஆகியவை உருவாக்கப்பட்டன. 1996 மற்றும் 2002க்கு இடையில், ஐந்து புதிய மாவட்டங்களாக அஜப்சிர், அசராஷார்ர், சரோவீக், ஓஸ்கு, வர்சான் ஆகியவை உருவாக்கப்பட்டன.[3] 2010 ஆம் ஆண்டில் கலிபாரின் வட பகுதியானது கோடா அபரின் என்றும், தென் பகுதி கலிபார் என்ற பெயரோடு பிரிக்கப்பட்டது.
கிழக்கு அசர்பைசான் மாகாணமானது ஈரானின் தொழில் மையமாக உள்ளது. கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் 5000 உற்பத்தி அலகுகள் (தேசிய அளவில் 6% சதவீதம்) உள்ளன. 1997இல் இந்த அலகுகளின் உற்பத்தி மதிப்பு அமெரிக்க $ 374 மில்லியனாக இருந்தது. மொத்த முதலீடானது 1997 ஆம் ஆண்டில் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது.[4]
கிழக்கு அசர்பைசான் மாகாணத்தில் உள்ள சில முக்கிய தொழிற்சாலைகள் கண்ணாடி தொழில்கள், காகித உற்பத்தி, எஃகு, தாமிரம் மற்றும் நெய்ப்ஃபைன் சைனேட், எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல் பதப்படுத்துதல், ரசாயன பொருட்கள், மருந்தியல் பதப்படுத்துதல், ஃபவுண்டரிஸ், வாகனம் மற்றும் வாகனப் பகுதிகள் தொழில்கள், தொழில்துறை இயந்திரங்கள், விவசாய இயந்திரம், உணவுத் தொழில்கள், தோல் மற்றும் காலணி தொழில்கள் போன்றவை ஆகும்.
கிழக்கு அசர்பைசானில் யுனெசுகோவானது இரு பல்லுயிர் பாதுகாப்பகங்கள அறிவித்துள்ளது. ஒன்று உர்மியா ஏரி மற்றொன்றும அர்சர்பாரன் ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.