கிளாடியா செய்ன்பாம் பார்டோ
From Wikipedia, the free encyclopedia
கிளாடியா செய்ன்பாம் பார்டோ[lower-alpha 1] (Claudia Sheinbaum Pardo) (பிறப்பு 24 சூன் 1962) என்பவர் ஒரு மெக்சிகோ அரசியல்வாதி, அறிவியலாளர் மற்றும் கல்வியாளர், மெக்சிகோவின் தேர்வுக் குடியரசுத் தலைவரும் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அரசுத் தலைவரும் ஆவார்.[3] இவர் இடதுசாரி அரசியல் இயக்கமான மொரெனா தேசிய மறுசீரமைப்பு இயக்கத்தின் உறுப்பினர் ஆவார்.[4]
கிளாடியா செய்ன்பாம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
2024-ஆம் ஆண்டில் செய்ன்பாம் | |||||||
மெக்சிகோ அரசத் தலைவர் தேர்வு | |||||||
பதவியில் 1 அக்டோபர் 2024[1] | |||||||
Succeeding | ஆண்ட்ரெஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடார் | ||||||
மெக்சிகோ நகரத்தின் அரசத் தலைவர்கள் பட்டியல் | |||||||
பதவியில் 5 திசம்பர் 2018 – 16 சூன் 2023 | |||||||
முன்னையவர் | ஜோஸ் ராமோன் அமிய்வா | ||||||
பின்னவர் | மார்டி பாட்ரெஸ் | ||||||
திலால்பான் நகரத்தந்தை | |||||||
பதவியில் 1 அக்டோபர் 2015 – 6 திசம்பர் 2017 | |||||||
முன்னையவர் | எக்டார் ஹியூகோ எர்மான்டெஸ் ரோட்ரிகியூஸ் | ||||||
பின்னவர் | ஃபெர்னான்டோ எர்னான்டேஸ் பலாசியோஸ் | ||||||
மெக்சிக்கோ நகர சுற்றுச்சூழல் செயலாளர் | |||||||
பதவியில் 5 திசம்பர் 2000 – 15 மே 2006 | |||||||
அரசுத் தலைவர் | ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபெஸ் ஓப்ரடார் | ||||||
முன்னையவர் | அலேஜான்ட்ரோ என்சினாஸ் ரோட்ரிகியூஸ் | ||||||
பின்னவர் | எடுவார்டோ வேகா லோபெஸ் | ||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||
பிறப்பு | கிளாடியா செய்ன்பாம் பார்டோ 24 சூன் 1962 (1962-06-24) (அகவை 62) மெக்சிக்கோ நகரம், மெக்சிகோ | ||||||
அரசியல் கட்சி | மொரீனா (அரசியல் இயக்கம்) (2014-லிருந்து) | ||||||
பிற அரசியல் தொடர்புகள் | ஜனநாயகப் புரட்சிக் கட்சி (1989–2014) | ||||||
துணைவர்கள் |
| ||||||
பிள்ளைகள் | 2 | ||||||
பெற்றோர் | கார்லோஸ் செய்ன்பாம் யோசெலெவிட்சு (தந்தை) அன்னி பார்டோ செமோ (தந்தை) | ||||||
கல்வி | மெக்சிகோ தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகம்(இளங்கலை அறிவியல், முதுகலை அறிவியல், முனைவர்) | ||||||
கையெழுத்து | |||||||
| |||||||
2000 முதல் 2006 வரை இவர் மெக்சிகோ நகர அரசத் தலைவராக இருந்த பதவிக்காலத்தில் செய்ன்பாம் சுற்றுச்சூழல் பகுதி செயலாளராகவும் ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடாரின் எதிர்காலத் தலைவராகவும் இருந்தார். இவர் 2015 முதல் 2017 வரை திலால்பான் பாரோவ் நகரத்தந்தையும் ஆவார். 2018 தேர்தலில் மெக்சிகோ நகரத்தின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த போது சட்ட அமலாகத்தின் வலயப்படுத்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.[5]
தொழில்முறை அறிவியலாளராக, செய்ன்பாம் மெக்சிகோ தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தில் ஆற்றல் பொறியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவர் ஆற்றல், சுற்றுச்சூழல், வளங்குன்றா வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் 100 கட்டுரைகள் மற்றும் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் 2018-ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவிற்குப் பங்களித்தார். பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 100 பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.[6]
2023, சூனில் செய்ன்பாம் அரசுத் தலைவராகப் பணியாற்றிய தனது பதவியிலிருந்து விலகி 2024-ஆம் ஆண்டுத் தேர்தலில் மொரீனா அரசுத் தலைவர் வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்தார். செப்டம்பர் 2023-இல், இவர் கட்சியில் தனது நெருங்கிய எதிர்ப்பாளரான மேனாள் வெளியுறவுத் துறை செயலாளர் மார்சிலோ எப்ரார்டு வேட்புமனுவினைத் தோற்கடித்தார்.[7] 2024 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் செய்ன்பாம் மெக்சிகோ பொதுத்தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்றார். செய்ன்பாம் அரசப் பொறுப்பேற்ற பிறகு, இவர் தான் முதல் பெண் மெக்சிகோ அரசத்தலைவர் ஆவார். மேலும், முதல் யூதப் பின்னணியிலிருந்து வந்த முதல் பெண் அரசுத் தலைவரும் ஆவார். [lower-alpha 2][9][10]